Friday, March 29

பகவத் கீதை – 18.61

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஈஷ் வர : ஸர்வ – பூ , தானாம்
ஹ்ருத் , -தே ஷே , ( அ ) ர்ஜுன திஷ்ட தி
ப்ராமயன் ஸர்வ – பூதானி
யந்த்ராரூடா னி மாயயா

ஈஷ்வர : – முழுமுதற் கடவுள் ; ஸர்வ – பூ , தானாம் – எல்லா உயிர்வாழிகளின் ; ஹ்ருத் – தே ஷே , – இதயத்தில் ; அர்ஜுன – ஓ அர்ஜுனா ; திஷ்ட தி – வாழ் கின்றார் ; ப் ராமயன்- பயணத்திற்கு காரணமாகி ; ஸர்வ – பூ , தானி- எல்லா உயிர்வாழிகள்; யந்த்ர – இயந்திரம்; ஆரூடானி – வைக்கப்பட்டு,மாயயா-ஜட – சாதியின் மயக்கத்தின் கீழ்

ஓ அர்ஜுனா, ஜட சக்தியால் செய்யப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்துள்ள எல்லா உயிர்வாழிகளின் பயணங்களையும் , அவரவர் இதயத்தில் வீற்றுள்ள முழுமுதற் கடவுளே வழிநடத்துகின்றார்

பொருளுரை : அர்ஜுனன் எல்லாவற்றையும் அறிந்தவனல்ல , போரிடு வதா , கூடாதா என்பதில் அவனது முடிவு , வரம்பிற்குட்பட்ட அவனது பகுத்தறிவின் எல்லையைப் பொறுத்தது . ஜீவாத்மாவே எல்லாம் அல்ல என்று பகவான் கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார் . பரம புருஷ பகவானான கிருஷ்ணரே பரமாத்மாவின் உருவில் , இதயத்தில் அமர்ந்து உயிர்வாழிகளை வழிநடத்திக் கொண்டுள்ளார் . உடல்களை மாற்றிக் கொண்ட பின் , உயிர்வாழி தனது முந்தைய செயல்களை மறக்கின்றான் ; ஆனால் கடந்த கால , தற்கால , எதிர்கால விஷயங்களை அறியும் பரமாத்மா அவனது எல்லா செயல்களுக்கும் சாட்சியாக இருக்கின்றார் . எனவே , உயிர்வாழிகளின் எல்லா செயல்களும் இந்த பரமாத்மாவால் வழிநடத்தப்படுபவையே . தனக்கு உரித்தானவற்றை பெறும் உயிர்வாழி , பரமாத்மாவின் வழிகாட்டுதலின் கீழ் ஜட இயற்கையால் படைக்கப்பட்ட ஜடவுடலால் எடுத்துச் செல்லப்படு கின்றான் . அந்த உயிர்வாழி ஒரு குறிப்பிட்ட உடலில் வைக்கப்பட்டவுடன் , அவன் அந்த உடலின் சூழ்நிலை என்னும் மயக்கத்தின் கீழ் செயல்பட வேண்டியுள்ளது . உயிர்வாழி என்னும் ஓட்டுநர் ஒரே மாதிரியாக இருந்தாலும் , வெகு விரைவாகச் செல்லும் காரில் அமர்ந்திருப்பவள் மெதுவான காரில் இருப்பவனைவிட வேகமாகப் பயணம் செய்கின்றான் . அதுபோல , ஒரு குறிப்பிட்ட ஜீவாத்மா , தனது கடந்த கால விருப்பங்களுக்கு ஏற்பச் செயல்படுவதற்காக , ஜட இயற்கை ஒரு குறிப்பிட்ட உடலை பரமாத்மாவின் கட்டளைப்படி தயார் செய்து கொடுக்கின்றது . உயிர்வாழி சுதந்திரமானவனல்ல . அவன் தன்னை பரம புருஷ பகவானிலிருந்து சுதந்திரமானவன் என்று எண்ணக் கூடாது . அவன் எப்போதும் பகவானின் கட்டுப்பாட்டின் கீழ் அடுத்த பதத்தின் உபதேசம் உள்ளான் . எனவே , அவனது கடமை அவரிடம் சரணடைவதே . இதுவே அடுத்த பதத்தின் உபதேசம்.

+1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question