பகவத் கீதை – 18.26
முக்த ஸங்கோ ( அ) நஹம்-வாதீ , த்ருத்-யுத்ஸாஹ-ஸமன்வித:ஸித்த்-யஸித் த் யோர் நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதேமுக்க லங்க : - எல்லா பௌதிக உறவிலிருந்தும் விடுபட்டு; அனஹம் வாதி - அஹங்காரம் இன்றி ; த்ருதி - மன உறுதி ; உத்ஸாஹ - பெரும் உற்சாகத்துடன் ; ஸமன்வித : - தகுதிபெற்று ; ஸித்தி - வெற்றியில் ; அஸித்தயோ : -- தோல்வியில் ; நிர்விகார : - மாற்றமின்றி ; கர்நா- செய்பவன் : ஸாத்த்விக : - ஸத்வ குணத்தில் , உச்யதே - இருப்பதாகக் கூறப்படுகின்றான்.எவனொருவன் , இயற்கை குணங்களின் தொடர்பின்றி , அஹங்காரமின்றி , உற்சாகம் மற்றும் மனவுறுதியுடன் , வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது தனது செய்கின்றானோ , அத்தகு செயலாளி ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது .பொருளுரை : கிருஷ்ண உணர்விலிருப்பவன் ஜட இயற்கையின் குணங் களுக்கு எப்போதும் அப்பாற்பட்டவன் . அவனிடம் ஒப்படைக்கப்பட்ட செயலின் பலன்களை அவன் எதிர்பா...