Friday, March 29

பகவத் கீதை – 16.19

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தான் அஹம் த் விஷத : க்ரூரான்
ஸம்ஸாரேஷ நராத மான்
க்ஷிபாம் யஜஸ்ரம் அஷ பான்
ஆஸுரீஷ்வ் ஏவ யோனிஷு

தான் – அவர்கள் ; அஹம் – நான் ; த் விஷத : – பொறாமை ; க்ரூரான்- கருணை யற்ற ; வம்ஸாரேஷ் -ஜட வாழ்க்கை என்னும் கடலுக்குள் : நர – ஆத மான் மனித இனத்தின் தாழ்ந்த வகுப்பில் ; ஷிபாமி — நான் வைக்கின்றேன் ; அஜஸ்ரம் – நிரந்தரமாக ; அஷு பான் – அமங்களமான ; ஆஸுஷ் – அசுரத் தனமான ; வ – நிச்சயமாக ; யோனிஷ- கர்ப்பங்களில்.

பொறாமையுடன் கருணையின்றி இருக்கும் இத்தகு கடைநிலை மனிதர்களை , ஜட வாழ்வு என்னும் கடலில் பல்வேறு அசுர இனங்களுக்குள் நான் நிரந்தரமாகத் தள்ளுகின்றேன்.

பொருளுரை : தனிப்பட்ட ஆத்மா ஒரு குறிப்பிட்ட உடலில் வைக்கப் படுவது பகவானின் இச்சைக்கு ஏற்பவே என்பது இப்பதத்தில் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது . அசுரத்தனமான மனிதன் கடவுளின் உன்னத தன்மையை ஏற்காமல் இருக்கலாம் , தனது சொந்த விருப்பப்படி செயல்படலாம் ; ஆனால் அவனது அடுத்த பிறவி பரம புருஷ பகவானின் முடிவைச் சார்ந்தது . அவனது கையில் இல்லை இதுவே உண்மை , ஸ்ரீமத் பாகவதத்தின் மூன்றாவது காண்டத்தில் , ஒரு தனிப்பட்ட ஆத்மா தனது மரணத்திற்குப் பின் , உயர்ந்த சக்தியின் மேற்பார்வையின் கீழ் குறிப்பிட்ட தாயின் கருவில் வைக்கப்பட்டு , அங்கே ஒரு குறிப்பிட்ட விதமான உடலைப் பெறுகின்றான் என்று கூறப்பட்டுள்ளது . எனவேதான் , மிருகங்கள் , பூச்சிகள் , மனிதர்கள் என்று பலதரப்பட்ட உயிரினங்களை நாம் ஜட வாழ்வில் காண் கின்றோம் . இவையெல்லாம் பரம சக்தியால் ஏற்பாடு செய்யப்படுகின்றன , தற்செயலாக நடப்பவை அல்ல . அசுரத் தன்மையுடையவர்களைப் பொறுத்தவரையில் , அவர்கள் நிரந்தரமாக அசுரர்களின் கருவில் வைக்கப் படுகின்றனர் என்றும் , தொடர்ந்து பொறாமையுடன் மனித இனத்தின் கடைநிலையில் இருப்பர் என்றும் இங்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது . இத்தகு அசுரத் தன்மையுடைய மனித இனங்கள் , எப்போதும் , காமம் நிறைந்தவர்களாக , ஹிம்சை செய்பவர்களாக , வெறுப்பு நிறைந்தவர்களாக , தூய்மையற்றவர்களாகக் காணப்படுகின்றனர் . காட்டிலுள்ள பலதரப்பட்ட வேடர்கள் அசுர வாழ்வினங்களைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question