பகவத் கீதை – 16.4
தம்போ தர்போ (அ) பிமானஷ் ச க்ரோத: பாருஷ்யம் ஏவ சஅக்ஞானம் சாபி ஜாதஸயபார்த ஸம்பதம் ஆஸுரீம்தம்ப: - தற்பெருமை; தர்ப : - அகந்தை , அபி மான : வீண் அபிமானம் ,ச - மேலும் , க்ரோத: - கோபம் , பாருஷ்யம் - கொடூரம்; ஏவ - நிச்சயமாக; ச - மற்றும்; அக்ஞானம் - அறியாமை; ச - மற்றும்; அபிஜாதஸ்ய - பிறந்தவனின் ; பார்த - பிருதாவின் மைந்தனே ; ஸம்பதம் - குணங்கள் ; ஆஸுரீம் - அசுர இயற்கையின்.பிருதாவின் மைந்தனே , தற்பெருமை , அகந்தை , வீண் அபிமானம் , கோபம் , கொடூரம் , அறியாமை ஆகியவை அசுர இயல்புடையவர்களின் குணங்களாகும் .பொருளுரை : இப்பதத்தில் நரகத்திற்கான ராஜ பாதை விவரிக்கப் பட்டுள்ளது . கொள்கைகளைப் பின்பற்றாவிடினும் , ஆன்மீக ஞானத்தில் முன்னேற்றம் பெறுவதாகவும் தர்மத்தைப் பின்பற்றுவதாகவும் அசுரர்கள் வெறும் படம் காட்டுகின்றனர் . ஓரளவு கல்வியையோ மிகுந்த செல்வத் தையோ அடைந்துவிட்டால் , அவர்கள் எப்போதும் க...