Saturday, July 27

பகவத் கீதை – 18.71

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஷ்ரத்தாவான் அனஷூயஷ்ச்
ஷ்ருணுயாத் அபி யோ நர:
ஸோ (அ)பி முக்த: ஷுபாங்ல் லோகான்
ப்ராப்னுயாத் புண்ய-கர்மணாம்

ஷ்ரத்தாவான் – நம்பிக்கையுடன் ; அனஷூய: – பொறாமையின்றி . ச- மற்றும் : ஷ்ருணுயாத்- கேட்பவன் ; அபி- நிச்சயமாக ; ய :- யாரொருவன் ; நர – மனிதன்; ஸ – அவனும் ; அபி – கூட ; முக்க : – முக்தி பெற்று; ஷுபான் -மங்களமான ; லோகான்- உலகங்களை , ப்ராப்னுயாத்- அடைகின்றான் ; புண்ய-கர்மணாம் – புண்ணியம் செய்தவர்களின் .

மேலும் , நம்பிக்கையுடனும் பொறாமையின்றியும் இதனை யாரொருவன் கேட்கின்றானோ , அவன் பாவ விளைவுகளி லிருந்து விடுபட்டு , புண்ணியம் செய்தவர்கள் வாழும் மங்கள கரமான லோகங்களை அடைகின்றான் .

பொருளுரை : இந்த அத்தியாயத்தின் அறுபத்தேழாம் பதத்தில் , தன் மீது பொறாமையுடைய நபர்களிடம் பகவத் கீதை விளக்கப்படுவதை பகவான் பகிரங்கமாகத் தடுத்துள்ளார் . வேறு விதமாகக் கூறினால் , பகவத் கீதை பக்தர்களுக்கு மட்டுமே . ஆனால் சில சமயங்களில் , பகவானின் பக்தன் பொதுமக்களிடம் உபன்யாஸம் வழங்கும்போது , அதனைக் கேட்பவர்கள் அனைவரும் பக்தர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்க முடியாது . அவ்வாறிருக்க , பக்தன் , அத்தகு பொதுவான உபன்யாஸங்களை வழங்குவது ஏன் ? இஃது இங்கு விளக்கப்படுகின்றது . அங்குள்ள ஒவ்வொருவரும் பக்தர்கள் அல்ல என்றபோதிலும் , கிருஷ்ணரின் மீது பொறாமை கொள்ளாத மனிதர்கள் பலர் அங்கு உள்ளனர் . கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் எனும் நம்பிக்கை அவர்களிடம் உள்ளது . அத்தகைய நபர்கள் , அங்கீகாரம் பெற்ற பக்தரிடமிருந்து பகவானைப் பற்றி கேட்டால் , அதன் பலனாக , எல்லா வித பாவ விளைவுகளிலிருந்தும் உடனடியாக விடுபட்டு , புண்ணியமான நபர்கள் வசிக்கும் உலகங்களை அடைவர் . எனவே , தூய பக்தனாக ஆவதற்கு முயற்சி செய்யாதவன்கூட , பகவத் கீதையை கேட்பதன் மூலமாகவே புண்ணியச் செயல்களின் பலன்களை அடைகின்றான் . இவ்வாறு , எல்லா பாவ விளைவுகளி லிருந்தும் விடுபட்டு பகவானின் பக்தனாவதற்கான வாய்ப்பை , தூய பக்தர் எல்லாருக்கும் கொடுக்கின்றார் .

பொதுவாக , பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டவர்களும் நல்லவர் களும் கிருஷ்ண உணர்வை வெகு எளிதாக மேற்கொள்கின்றனர் . புண்ய கர்மணாம் என்னும் சொல் இங்கு மிகவும் முக்கியமானது . இது வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள அஷ்வமேத யாகத்தைப் போன்ற மாபெரும் யாகங்கள் செய்வதை குறிக்கின்றது . தூய பக்தியில் ஈடுபடாத . ஆனால் பக்தித் தொண்டை ஆற்றுவதில் நேர்மையுடன் இருக்கும் நபர்கள் , துருவ மகாராஜர் வீற்றிருக்கும் துருவ லோகத்தைச் சென்றடைய முடியும் , பகவானின் பெரும் பக்தரான அவர் , துருவ நட்சத்திரம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பான லோகத்தில் இருக்கின்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question