Lord Krishna gives Memory & forgetfulness (Tamil) Story / நினைவோ, மறதியோ அளிப்பவர் கிருஷ்ணரே!
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோமத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் சவேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோவேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.- பகவத் கீதை 15.15குருக்ஷேத்திர யுத்தத்தின் பதினான்காம் நாளில் நடந்த நிகழ்ச்சி இது. முந்தைய நாளில் அபிமன்யு கொல்லப்பட்டதால், ஐயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வதாக சபதம் எடுத்த அர்ஜூனன், கடுமையாக போர் செய்தான். கௌரவர் தரப்பிலும், துரோணர், கர்ணன் முதற்கொண்டு கடுமையாகப் போர் புரிந்தனர்.ஆனால், கிருஷ்ணரின் கருணையால் அஸ்தமனத்திற்கு முன்பே, சூரியன் மறைக்கப்பட, அதனால் அன்றைய யுத்தம் முடிந்தது என்று நினைத்த ஜெயத்ரதனின் தலையை, கிருஷ்ணரின் ...