Saturday, December 21

Tag: bhagavad_gita_tamil_free

பகவத் கீதை – 18.61

Uncategorized
ஈஷ் வர : ஸர்வ - பூ , தானாம் ஹ்ருத் , -தே ஷே , ( அ ) ர்ஜுன திஷ்ட தி ப்ராமயன் ஸர்வ - பூதானி யந்த்ராரூடா னி மாயயாஈஷ்வர : - முழுமுதற் கடவுள் ; ஸர்வ - பூ , தானாம் - எல்லா உயிர்வாழிகளின் ; ஹ்ருத் - தே ஷே , - இதயத்தில் ; அர்ஜுன - ஓ அர்ஜுனா ; திஷ்ட தி - வாழ் கின்றார் ; ப் ராமயன்- பயணத்திற்கு காரணமாகி ; ஸர்வ - பூ , தானி- எல்லா உயிர்வாழிகள்; யந்த்ர - இயந்திரம்; ஆரூடானி - வைக்கப்பட்டு,மாயயா-ஜட - சாதியின் மயக்கத்தின் கீழ்ஓ அர்ஜுனா, ஜட சக்தியால் செய்யப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்துள்ள எல்லா உயிர்வாழிகளின் பயணங்களையும் , அவரவர் இதயத்தில் வீற்றுள்ள முழுமுதற் கடவுளே வழிநடத்துகின்றார்பொருளுரை : அர்ஜுனன் எல்லாவற்றையும் அறிந்தவனல்ல , போரிடு வதா , கூடாதா என்பதில் அவனது முடிவு , வரம்பிற்குட்பட்ட அவனது பகுத்தறிவின் எல்லையைப் பொறுத்தது . ஜீவாத்மாவே எல்லாம் அல்ல என்று பகவான் கிருஷ்ணர் அறிவுறுத்து...

பகவத் கீதை – 16.21

Uncategorized
த்ரி-விதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஷனம் ஆத்மன ;காம: க்ரோத ஸ் ததா லோப ஸ் தஸ்மாத் , ஏதத் த்ரயம் த்யஜேத்ரி - விதம் - மூன்று விதமான ; நரகஸ்ய - நரகத்தின் ; இதம் - இந்த ; தவாரம் --கதவு ; நாஷ னம்- அழிக்கக்கூடிய ; ஆத்மன : - ஆத்மாவை ; காம : -- காமம் ; க்ரோத : -- கோபம் ; ததா - அதுபோன்றே ; லோப : - பேராசை : தஸ்மாத்- எனவே ; ஏதத் - இந்த ; த்ரயம் - மூன்றையும் ; த்யஜேத்- ஒருவன் துறக்க வேண்டும் .காமம் , கோபம் , பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டுச் செல்லும் மூன்று கதவுகளாகும் . இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால் , ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும். பொருளுரை : அசுரத்தனமான வாழ்வின் ஆரம்பம் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது . தனது காமத்தைத் திருப்தி செய்ய ஒருவன் முயல்கின்றான் , அவனால் அது முடியாதபோது , கோபமும் பேராசையும் எழுகின்றன .அசுரத்தனமான உயிரினங்களுக்கு வீழ்ச்சியடைய விரும்பாத ...

பகவத் கீதை – 13.18

Uncategorized
ஜ்யோதிஷாம் அபி தஜ் ஜ்யோதிஸ்தமஸ: பரம் உச்யதேக்ஞானம் க்ஞேயம் க்ஞான-கம்யம்ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்ஜ்யோதிஷாம்—பிரகாசிக்கின்ற பொருள்கள் எல்லாவற்றிலும்; அபி—கூட; தத்—அந்த; ஜ்யோதி—ஒளியின் மூலம்; தமஸ:—இருட்டு; பரம்—அப்பாற்பட்ட; உச்யதே—கூறப்படுகின்றது; க்ஞானம்—அறிவு; க்ஞேயம்—அறியப்படும் பொருள்; க்ஞான-கம்யம்—அறிவின் இலக்கு; ஹ்ருதி—இதயத்தில்; ஸர்வஸ்ய—ஒவ்வொருவரின்; விஷ்டிதம்—வீற்றுள்ளார்.மொழிபெயர்ப்புபிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூலம் அவரே. அவர் ஜடத்தின் இருட்டிற்கு அப்பாற்பட்டவராகவும் தோன்றாதவராகவும் உள்ளார். அவரே அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும், அறிவின் இலக்காகவும் உள்ளார். அவர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றுள்ளார்.பொருளுரைசூரியன, சந்திரன், மற்றும் நட்சத்திரங்களைப் போன்று பிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் ஒளியின் மூலமாக இருப்பது ப...

பகவத் கீதை – 13.16

Uncategorized
பஹிர்-அந்தஷ் ச பூதானாம்அசரம் சரம் ஏவ சஸூக்ஷ்மத்வாத் தத் அவிக்ஞேயம்தூர-ஸ்தம் சாந்திகே ச தத்வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்பஹி:—வெளியே; அந்த:—உள்ளே; ச—மேலும்; பூதானாம்—எல்லா உயிர்வாழிகளின்; அசரம்—அசையாத; சரம்—அசைகின்ற; ஏவ—கூட; ச—மேலும்; ஸூக்ஷ்மத்வாத்—சூட்சுமமாக இருப்பதால்; தத்—அந்த; அவிக்ஞேயம்—அறிய முடியாத; தூர-ஸ்தம்—வெகு தூரத்தில்; ச—மேலும்; அந்திகே—அருகில்; ச—மேலும்; தத்—அந்த.மொழிபெயர்ப்புபரம உண்மை, எல்லா உயிர்வாழிகளின் உள்ளும் புறமும் உள்ளார், அசைவன மற்றும் அசையாதவற்றிலும் உள்ளார். அவர் சூட்சுமமானவர் என்பதால், ஜடப் புலன்களின் வலிமையால் காண்பதற்கோ அறிவதற்கோ அப்பாற்பட்டவர். மிக மிகத் தொலைவில் இருப்பினும், அவர் அனைவரின் அருகிலும் உள்ளார்.பொருளுரைஒவ்வொரு உயிர்வாழியின் உள்ளும் புறமும் பரம புருஷரான நாராயணர் வசிப்பதாக வேத இலக்கியத்திலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். ஆன்மீக உ...

பகவத் கீதை – 9.29

Uncategorized
ஸமோ (அ)ஹம் ஸர்வ-பூதேஷுந மே த்வேஷ்யோ (அ)ஸ்தி ந ப்ரிய:யே பஜந்தி து மாம் பக்த்யாமயி தே தேஷு சாப்-யஹம்Synonyms:ஸம — சமமானவன்; அஹம் — நான்; ஸர்வ-பூதேஷு — எல்லா உயிரினங்களுக்கும்; ந — யாருமில்லை; மே — எனக்கு; த்வேஷ்ய: — வெறுக்கின்ற; அஸ்தி — இருக்கின்றனர்; ந — இல்லை; ப்ரிய: — பிரியமான; யே — யாரொருவர்; பஜந்தி — திவ்யமான தொண்டில் ஈடுபட்டவர்; து — ஆயினும்; மாம் — எனக்கு; பக்த்ய — பக்தியில்; மயி — என்னில் உள்ளனர்; தே — அத்தகையோர்; தேஷு — அவர்களில்; ச — கூட; அபி — நிச்சயமாக; அஹம் — நான்.Translation:நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ, பாரபட்சம் காட்டுவதோ இல்லை. நான் அனைவருக்கும் சமமானவன். ஆயினும் பக்தியுடன் எனக்கு அன்புத் தொண்டு புரிபவன் யாராயினும், அவன் எனது நண்பன். அவன் என்னில் இருக்கிறான். நானும் அவனுக்கு நண்பனாகிறேன்.Purport:கிருஷ்ணர் எல்லாருக்கும் சமமானவர், அவருக்கு விசேஷமான நண...

பகவத் கீதை – 6.30

Uncategorized
யோ மாம் பஷ்யதி ஸர்வத்ரஸர்வம் ச மயி பஷ்யதிகதஸ்யாஹம் ந ப்ரணஷ்யாமிஸ ச மே ந ப்ரணஷ்யதிSynonyms:ய: — யாராயினும்; மாம் — என்னை; பஷ்யதி — காண்கிறானோ; ஸர்வத்ர — எங்கும்; ஸர்வம் — எதிலும்; ச — மேலும்; மயி — என்னில்; பஷ்யதி — காண்கிறான்; தஸ்ய — அவனுக்கு; அஹம் — நான்; ந — இல்லை; ப்ரணஷ்யாமி — இழந்துபோவது; ஸ: — அவன்; ச — மேலும்; மே — எனக்கு; ந — இல்லை; ப்ரணஷ்யதி — இழப்பது.Translation:என்னை எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் என்னிலும் காண்பவன் என்னை ஒருபோதும் இழப்பதில்லை. நானும் அவனை ஒருபோதும் இழப்பதில்லை.Purport:கிருஷ்ண பக்தன், கிருஷ்ணரை எங்கும் காண்பதும், கிருஷ்ணரில் எல்லாவற்றையும் காண்பதும் நிச்சயமே. ஜட இயற்கையின் தனித்தனித் தோற்றங்களை அவன் காண்பதுபோல இருந்தாலும், எல்லாம் கிருஷ்ண சக்தியின் தோற்றங்களே என்பதை அறிந்து, ஒவ்வொன்றிலும் அவன் கிருஷ்ணரை உணர்கிறான். கிருஷ்ணரின்றி எதுவுமே...

பகவத் கீதை – 6.35

Uncategorized
ஸ்ரீ-பகவான் உவாசஅஸம்ஷயம் மஹா-பாஹோமனோ துர்நிக்ரஹம் சலம்அப்யாஸேன து கௌந்தேயவைராக்யேண ச க்ருஹ்யதேSynonyms:ஸ்ரீ-பகவான் உவாச — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; அஸம்ஷயம் — சந்தேகமின்றி; மஹா-பாஹோ — பலம் பொருந்திய புயங்களை உடையவனே; மன: — மனம்; துர்நிக்ரஹம் — அடக்கக் கடினமானது; சலம் — சஞ்சலமானது; அப்யாஸேன — பயிற்சியினால்; து — ஆனால்; கௌந்தேய — குந்தியின் மகனே; வைராக்யேண — பற்றின்மையினால்; ச — மேலும்; க்ருஹ்யதே — கட்டுப்படுத்தக்கூடியது.Translation:பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: பலம் பொருந்திய புயங்களை உடைய குந்தியின் மகனே, அமைதியற்ற மனதை அடக்குவது சந்தேகமின்றி மிகவும் கடினமே. ஆனால் தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியமாகும்.Purport:அடங்காத மனதைக் கட்டுப்படுத்துவது சிரமம் எனும் அர்ஜுனனின் கூற்று, முழு முதற் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அதே...

பகவத் கீதை – 6.26

Uncategorized
யதோ யதோ நிஷ்சலதிமனஷ் சஞ்சலம் அஸ்திரம்ததஸ் ததோ நியம்யைதத்ஆத்மன்-யேவ வஷம் நயேத்Synonyms:யத: யத: — எங்கெல்லாம்; நிஷ்சலதி — மிகவும் கிளர்ச்சியடைகின்றதோ; மன: — மனம்; சஞ்சலம் — சஞ்சலம்; அஸ்திரம் — ஸ்திரமின்றி; தத: தத: — அங்கிருந்து; நியம்ய — ஒழுங்குப்படுத்தி; ஏதத் — இந்த; ஆத்மனி — ஆத்மாவில்; ஏவ — நிச்சயமாக; வஷம் — கட்டுப்பாட்டில்; நயேத் — கொண்டு வர வேண்டும்.Translation:மனம் தனது சஞ்சலமான நிலையற்ற தன்மையால் எங்கெல்லாம் சஞ்சரிக்கின்றதோ, அங்கிருந்தெல்லாம் மனதை இழுத்து மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.Purport:மனதின் இயற்கை சஞ்சலமானதும் நிலையற்றதுமாகும். ஆனால் தன்னுணர்வு அடைந்த யோகி மனதைக் கட்டுப்படுத்த வேண்டும், மனதினால் கட்டப்படுத்தப்படக் கூடாது. மனதை (அதன்மூலம் புலன்களையும்) கட்டுப்படுத்துபவன், கோஸ்வாமி அல்லது ஸ்வாமி என்று அழைக்கப்படுகின்றான், மனதால் கட்...

பகவத் கீதை – 6.6

Uncategorized
பந்துர் ஆத்மாத்மனஸ் தஸ்யயேனாத்மைவாத்மனா ஜித:அனாத்மனஸ் து ஷத்ருத்வேவர்தேதாத்மைவ ஷத்ரு-வத்Synonyms:பந்து: — நண்பன்; ஆத்மா — மனம்; ஆத்மன: — ஜீவனின்; தஸ்ய — அவனது; யேன — எதனால்; ஆத்மா — மனம்; ஏவ — நிச்சயமாக; ஆத்மனா — ஜீவனால்; ஜித: — வெல்லப்பட்ட; அனாத்மன: — மனதைக் கட்டுப்படுத்தத் தவறியவனின்; து — ஆனால்; ஷத்ருத்வே — விரோதத்தினால்; வர்தேத — அமைகின்றது; ஆத்மா ஏவ — அந்த மனமே; ஷத்ருவத் — விரோதியாக.Translation:மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும்; ஆனால் அவ்வாறு செய்யத் தவறியவனுக்கோ, அதுவே மிகப்பெரிய விரோதியாகும்.Purport:மனதை நண்பனாகச் செயல்படும்படி (மனிதனின் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள) கட்டுப்படுத்துவதே அஷ்டாங்க யோகப் பயிற்சியின் நோக்கமாகும். மனம் கட்டுப்படுத்தப்படவில்லையெனில், வெறுமே வெளிக் காட்சியாகச் செய்யப்படும் யோகம் பலனற்ற கால விரயமே. மனதை அடக்க முடியாதவன் எப்போத...

பகவத் கீதை – 6.5

Uncategorized
உத்தரேத் ஆத்மனாத்மானம்நாத்மானம் அவஸாதயேத்ஆத்மைவ ஹ்யாத்மனோபந்துர் ஆத்மைவரிபுர் ஆத்மன:Synonyms:உத்தரேத் — விடுதலை செய்ய வேண்டும்; ஆத்மனா — மனதால்; ஆத்மானம் — கட்டுண்ட ஆத்மா; ந — என்றுமில்லை; ஆத்மானம் — கட்டுண்ட ஆத்மா; அவஸாதயேத் — இழிநிலையை அடையச் செய்ய; ஆத்மா — மனம்; ஏவ — நிச்சயமாக; ஹி — ஐயமின்றி; ஆத்மன: — கட்டுண்ட ஆத்மாவின்; பந்து: — நண்பன்; ஆத்மா — மனம்; ஏவ — நிச்சயமாக; ரிபு — எதிரி; ஆத்மன: — கட்டுண்ட ஆத்மாவின்.Translation:மனதின் உதவியுடன் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக் கொள்ளக் கூடாது. மனமே கட்டுண்ட ஆத்மாவின் நண்பனும் எதிரியுமாவான்.Purport:ஆத்மா எனும் சொல், உபயோகிக்கப்படும் இடத்திற்கு ஏற்ப உடல், மனம், ஆத்மா என வெவ்வேறு பொருள்படும். யோக முறையில், கட்டுண்ட ஆத்மாவும் மனமும் மிகவும் முக்கியமானவை. யோகப் பயிற்சியின் மையம் மனமே என்பதால், இங்கே ஆத்ம...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question