Saturday, April 20

பகவத் கீதை – 16.15

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

இதம் அக்ய மயா லப்தம் இமம் ப்ராய்லயே மனோதம்
இதம் அஸ்தீதம் அபி மே பவிஷ்யதி புனர் தானம்

அஸெள மயா ஹத: ஷத்ருர் , ஹனிஷ்யே சாபரான் அபி
ஈஷ்கரோ (அ)ஹம் அஹம் போகீ ஸித் தோ (அ)ஹம் பலவான் ஸுகீ

ஆட்யோ (அ) பி ஜனவான் அஸ்மி கோ (அ)ன்யோ (அ)ஸ்தி ஸத் ருஷோ மயா
யக்ஷ்யே தாஸ்யாமி மோதி ஷ்ய இத்- யக்ஞான விமோஹிதா :

இதம் இந்த அத்ய இன்று மயா- என்னால் ; மதம் – அடையப் பட்டது : இமம் – இந்த பபாப்ஸ்யே நான் அடைவேன் ; மன பதம் – எனது ஆசைகளுக்கு ஏற்ப ; இதம் இந்த அஸ்தி இருக்கின்றது ; இதம் இந்த : அபி கூட ; மே – எனது : ப விஷ்யதி எதிர்காலத்தில் அது அதிகமாகும் ; புன : மீண்டும் ; நடனம் – செல்வம் , அலெள அதுவும் ; மயா- என்னால் , தை : கொல்லப்பட்டனர் ; டிதரு- எதிரி ; ஹனிஷ்யே நான் கொல்வேன் ; — மேலும் ; அபரான் மற்றவர்கள் ; — நிச்சயமாக ; ஈஷ்வா – இறைவன் ; அஹம் நானே ; அஹம் நானே ; போக -அனுபவிப்பவன் ; ஸித்தா பக்குவமானவன் ; அஹம் நானே ; ப ய வான்– பலமுடையவன் ; – மகிழ்ச்சியானவன் ; ஆட்டய : – செல்வமுடையவன் ; அபி , ஜன வான் செல்வச் செழிப்புமிக்க உறவினர்களால் சூழப்பட்டவன் ; அஸ்மி – நானே ; : – யார் ; அன்ய – வேற்று நபர் ; அஸ்தி – இருக்கின்றனர் ; ஸத் , ருவு – போல ; மயா என்னை ; யஷ்யே – யாகம் செய்வேன் ; தா , ஸ்யாமி – தானம் செய்வேன் ; மோதிஷ்ய – இன்பமாக இருப்பேன் ; இதி – இவ்வாறு ; அக்ஞான அறியாமை யால் ; விமோஹிதா : – மயக்கப்பட்டு ,

அசுரத் தன்மையுடையவன் எண்ணுகின்றான் : ‘ ‘ இன்று என்னிடம் இவ்வளவு சொத்து உள்ளது , எனது திட்டங்களின் படி நான் நிறைய இலாபம் அடையப் போகின்றேன் . தற்போது இவ்வளவு என்னுடையதாக இருக்கின்றது , எதிர்காலத்தில் இது மேன்மேலும் பெருகும் . அவன் என்னுடைய எதிரி , அவனை நான் கொன்றுவிட்டேன் , என்னுடைய மற்ற எதிரிகள் கொல்லப்படுவர் . நானே எல்லாவற்றின் இறைவன் . நானே அனுபவிப்பாளன் . நானே பக்குவமானவனும், பலமுடையவனும், மகிழ்ச்சியானவனும் ஆவேன். செல்வாக்கு மிக்க உறவினர்களால் சூழப்பட்ட மிகப்பெரிய செல்வந்தன் நானே. என்னைப் போன்று சக்தியுடையவனும் மகிழ்பவனும் வேறு யாரும் இல்லை. நான் யாகங்கள் செய்வேன், தானங்கள் கொடுப்பேன், இவ்வாறு இன்பமாக இருப்பேன்,” இவ்விதமாக, அத்தகு மக்கள் அறியாமையினால் மயக்கப்பட்டுள்ளனர்.

+1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question