Tiritha Muni (Tamil) / திரித முனிவர்
இவர் பிரஜாபதியான கௌதமரின் மூன்று மகன்களில் ஒருவராவார். அவரது மற்றஇரு சகோதரர்கள் ஏகத், துவிய என்று அழைக்கப்பட்டனர். அம்மூவருமே சிறந்தமுனிவர்களும், மதக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றியவர்களுமாவர். அவர்களதுகடுந்தவங்களின் பலனாய், அவர்கள் பிரம்மதேவர் வாழும் உலகமான பிரம்மலோகத்திற்குஉயர்த்தப்பட்டனர். ஒருமுறை திரித முனி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவர் பலயாகங்களை ஏற்பாடு செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார். மாமுனிவர்களுள் ஒருவர்என்ற முறையில், மரணப் படுக்கையிலிருந்த பீஷ்மதேவருக்கு மரியாதை செலுத்த அவரும்வந்திருந்தார். வருணலோகத்திலுள்ள ஏழு ரிஷிகளில் அவரும் ஒருவராவார். அவர் உலகின்மேற்கு நாடுகளிலிருந்து வந்தவராவார். எனவே அவர் ஐரோப்பிய நாடுகளிலிருந்துவந்தவராக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அச்சமயத்தில் உலகம் முழுவதுமே ஒரேவேதப் பண்பாட்டின் கீழ் இருந்தது.- ஸ்ரீமத் பாகவதம் 1.9.7 (பொருளுரை)
...