பகவத் கீதை – 5.19
இஹைவ தைர் ஜித: ஸர்கோயேஷாம் ஸாம்யே ஸ்திதம் மன:நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்மதஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:Synonyms:இஹ — இவ்வாழ்வில்; ஏவ — நிச்சியமாக; தை: — அவர்களால்; ஜித: — வெல்லப்பட்டு; ஸர்க: — பிறப்பும் இறப்பும்; யேஷாம் — அவர்களது; ஸாம்யே — சமநோக்கில்; ஸ்திதம் — நிலைபெற்று; மன: — மனம்; நிர்தோஷம் — தோஷமில்லாத; ஹி — நிச்சியமாக; ஸமம் — சமத்துவதில்; ப்ரஹ்ம — பிரம்மனைப் போன்று; தஸ்மாத் — எனவே; ப்ரஹ்மணி — பிரம்மனில்; தே — அவர்கள்; ஸ்திதா: — நிலைபெற்றுள்ளனர்.Translation:ஒருமையிலும் சமத்துவத்திலும் மனதை நிலைநிறுத்தியவர்கள், பிறப்பு இறப்பின் நியதிகளை ஏற்கனவே வென்றுவிட்டனர். பிரம்மனைப் போன்றே தோஷமற்று இருப்பதால், அவர்கள் ஏற்கனவே பிரம்மனில் நிலைபெற்றவர்கள்.Purport:மேலே கூறப்பட்டது போன்று, மனதில் சம நிலையுடன் இருப்பது தன்னுணர்வின் அறிகுறியாகும். அத்தகு நிலையை உண்மையில் அடைந்தவர்கள், ஜ...