Tuesday, April 23

பகவத் கீதை – 5.19

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

இஹைவ தைர் ஜித: ஸர்கோ
யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மன:
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம
தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:

Synonyms:

இஹ — இவ்வாழ்வில்; ஏவ — நிச்சியமாக; தை: — அவர்களால்; ஜித: — வெல்லப்பட்டு; ஸர்க: — பிறப்பும் இறப்பும்; யேஷாம் — அவர்களது; ஸாம்யே — சமநோக்கில்; ஸ்திதம் — நிலைபெற்று; மன: — மனம்; நிர்தோஷம் — தோஷமில்லாத; ஹி — நிச்சியமாக; ஸமம் — சமத்துவதில்; ப்ரஹ்ம — பிரம்மனைப் போன்று; தஸ்மாத் — எனவே; ப்ரஹ்மணி — பிரம்மனில்; தே — அவர்கள்; ஸ்திதா: — நிலைபெற்றுள்ளனர்.

Translation:

ஒருமையிலும் சமத்துவத்திலும் மனதை நிலைநிறுத்தியவர்கள், பிறப்பு இறப்பின் நியதிகளை ஏற்கனவே வென்றுவிட்டனர். பிரம்மனைப் போன்றே தோஷமற்று இருப்பதால், அவர்கள் ஏற்கனவே பிரம்மனில் நிலைபெற்றவர்கள்.

Purport:

மேலே கூறப்பட்டது போன்று, மனதில் சம நிலையுடன் இருப்பது தன்னுணர்வின் அறிகுறியாகும். அத்தகு நிலையை உண்மையில் அடைந்தவர்கள், ஜட நியதிகளைக் கடந்தவர்களாக (குறிப்பாக பிறப்பு இறப்பைக் கடந்தவர்களாக) கருதப்பட வேண்டும். ஒருவன் தன்னை உடலுடன் அடையாளம் காணும்வரை, அவன் கட்டுண்ட ஆத்மாவாக கருதப்படுகிறான். ஆனால் தன்னுணர்வின் மூலம், சமத்துவ தளத்திற்கு உயர்த்தப்பட்டவுடன், அவன் கட்டுண்ட வாழ்விலிருந்து முக்தியடைகிறான். வேறு விதமாகக்கூறினால், இப்பௌதிக உலகில் மீண்டும் பிறக்க வேண்டிய தேவை அவனுக்கு இல்லை, ஆனால் தனது மரணத்திற்குப் பின் ஆன்மீக வானில் அவன் நுழைய முடியும். விருப்பு வெறுப்பு அற்றவரான, கடவுளுக்கு தோஷம் கிடையாது. அதுபோலவே, விருப்பு வெறுப்புகளில் இருந்து விடுபடும்போது உயிர்வாழியும் தோஷமற்றவனாகி, ஆன்மீக வானில் நுழைய தகுதி வாய்ந்தவனாகிறான். இத்தகையோர் ஏற்கனவே முக்தியடைந்தவர்களாகக் கருதப்பட வேண்டும். இவர்களது அறிகுறிகள் கீழே விளக்கப்படுகின்றன.

+1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question