பகவத் கீதை – 12.13,14
அத்வேஷ்டா ஸர்வ–பூதானாம் மைத்ர: கருண ஏவ சநிர்மமோ நிரஹங்கார: ஸம-து:க-ஸுக: க்ஷமீஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஷ்சய : மய்-யர்பித–மனோ–புத்திர் யோ மத்-பக்த: ஸ மே ப்ரிய:வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்அத்வேஷ்டா—பொறாமையற்ற; ஸர்வ–பூதானாம்—எல்லா உயிர்களிடத்திலும்; மைத்ர:—நட்புடன்; கருண:—அன்புடன்; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்; நிர்மம:—உரிமையாளர் என்ற உணர்வின்றி; நிரஹங்கார:—அஹங்காரம் இன்றி; ஸம—சமமாக; து:க—துன்பத்திலும்; ஸுக:—இன்பத்திலும்; க்ஷமீ—மன்னித்து; ஸந்துஷ்ட:—திருப்தியுடன்; ஸததம்—எப்போதும்; யோகீ—பக்தியில் ஈடுபட்டுள்ளவன்; யத-ஆத்மா—சுய கட்டுப்பாடு; த்ருட-நிஷ்சய—உறுதியுடன்; மயி—என் மீது; அர்பித—ஈடுபடுத்தி; மன—மனதை; புத்தி:—புத்தியுடன்; ய:— எவனொருவன்; மத்-பக்த:—எனது பக்தன்; ஸ:—அவன்; மே—எனக்கு; ப்ரிய:—பிரியமானவன்.மொழிபெயர்ப்புஎவனொருவன், பொறாமை இல்லாதவனாக, எல்லா உயிர்களுக்கும் அன்ப...