பகவத் கீதை – 6.30
யோ மாம் பஷ்யதி ஸர்வத்ரஸர்வம் ச மயி பஷ்யதிகதஸ்யாஹம் ந ப்ரணஷ்யாமிஸ ச மே ந ப்ரணஷ்யதிSynonyms:ய: — யாராயினும்; மாம் — என்னை; பஷ்யதி — காண்கிறானோ; ஸர்வத்ர — எங்கும்; ஸர்வம் — எதிலும்; ச — மேலும்; மயி — என்னில்; பஷ்யதி — காண்கிறான்; தஸ்ய — அவனுக்கு; அஹம் — நான்; ந — இல்லை; ப்ரணஷ்யாமி — இழந்துபோவது; ஸ: — அவன்; ச — மேலும்; மே — எனக்கு; ந — இல்லை; ப்ரணஷ்யதி — இழப்பது.Translation:என்னை எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் என்னிலும் காண்பவன் என்னை ஒருபோதும் இழப்பதில்லை. நானும் அவனை ஒருபோதும் இழப்பதில்லை.Purport:கிருஷ்ண பக்தன், கிருஷ்ணரை எங்கும் காண்பதும், கிருஷ்ணரில் எல்லாவற்றையும் காண்பதும் நிச்சயமே. ஜட இயற்கையின் தனித்தனித் தோற்றங்களை அவன் காண்பதுபோல இருந்தாலும், எல்லாம் கிருஷ்ண சக்தியின் தோற்றங்களே என்பதை அறிந்து, ஒவ்வொன்றிலும் அவன் கிருஷ்ணரை உணர்கிறான். கிருஷ்ணரின்றி எதுவுமே இருக...