பகவத் கீதை – 18.66
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ - பாபேப் யோ மோக்ஷயிஷ்யாமி மாஷச :ஸர்வ தர்மான்- எல்லாவித தர்மங்களையும் ; பரித்யஜ்ய - துறந்து ; மாம் என்னிடம் ; ஏகம்- மட்டுமே ; ஷரணம் --சரணாகதி ; வ்ரஜ - அடைவாய் ; அஹம் - நான் ; த்வாம்- உன்னை ; ஸர்வ-- எல்லா ; பாபேப் ய : - பாவ விளைவு களிலிருந்தும் ; மோக்ஷயிஷ்யாமி - விடுவிக்கின்றேன் ; மா - வேண்டாம் ; ஷுச : -- கவலைப்படஎல்லாவிதமான தர்மங்களையும் துறந்து , என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன் , பயப்படாதே .பொருளுரை : பரபிரம்மன் , பரமாத்மா , வர்ணாஷ்ரமம் , சந்நியாசம் , பற்றின்மை , மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துதல் , தியானம் போன்ற பலதரப்பட்ட அறிவையும் தர்மத்தையும் பகவான் விவரித்துள்ளார் . பலதரப்பட்ட தர்மங்களை அவர் பல்வேறு வழிகளில் விளக்கினார் . தற்போது , பகவத் கீதையின்...