
Aja / Annada Ekadasi / அஜா – (அன்னதா) ஏகாதசி
பாத்ரபத மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அஜா -அன்னதாஏகாதசியாக கொண்டாடுவர். அஜா - அன்னதா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.ஸ்ரீ யுதிஷ்டிரர் பரமாத்மா கண்ணனிடம் - "ஹே ! ஜனார்தனா, இவ்வுலக ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாத்துரட்சிப்பவரே, பாத்ரபத மாதத்தின் (ஆகஸ்ட் -செப்டெம்பர்) கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயரையும், அதன்மகத்துவத்தையும் விரிவாக எனக்கு எடுத்துரையுங்கள்" என்று வேண்டி நின்றார்.கிருஷ்ண பரமாத்மா தர்மபுத்ரரின் வேண்டுகோளுக்கு இணங்கி, பதிலளிக்கையில் "ஹே! ராஜன், நான் சொல்லுவதைமிகவும் கவனத்துடன் கேள், பாபங்களைப் போக்கும் இந்த புண்ய ஏகாதசி அஜா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.இந்நாளில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, புலன்களுக்கு அதிபதியான ரிஷிகேசரை வழிபட்டால்,பாபத்தின் கர்மவிளைவுகளிலிருந்து விடுபடுவர். அஜா ஏகாதசியின் மஹிமையை காதால் கேட்டாலே, கேட்பவரின்பாவங்கள் அனைத...