Thursday, October 29

ஏகாதசி

Mohini Ekadasi (Tamil) / மோஹினி ஏகாதசி

Mohini Ekadasi (Tamil) / மோஹினி ஏகாதசி

ஏகாதசி
https://youtu.be/vn0hpxEgJXw மோஹினி ஏகாதசியின் மகிமை  மோஹினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி சூர்ய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ ஜனார்த்தனா ! மோஹினி ஏகாதசி கடை பிடிப்பது எப்படி? மேலும் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன் என்ன? இவற்றைப்பற்றி எனக்கு விரிவாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ தர்மத்தின் மகனே! ஒருமுறை வசிஷ்டமுனிவர் பகவான் இராமச்சந்திரனிடம் கூறிய கதையைப் பற்றி கவனமாகக் கேள்.    நீண்ட காலத்திற்கு முன் ஒருமுறை பகவான் இராமச்சந்திரர் வசிஷ்ட முனிவரிடம் கேட்டார். ஓ மரியாதைக்குரிய முனிவரே! நான் ஜனகராஜரின் மகளான சீதையை விட்டு பிரிந்திருப்பதால் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவு செய்து ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் மனவருத்தத்தையும் அழிக்கக்கூடிய ஒரு விரதத்தைப...
Utpanna Ekadasi (Tamil) I உத்பன்ன ஏகாதசி

Utpanna Ekadasi (Tamil) I உத்பன்ன ஏகாதசி

ஏகாதசி
ஏகாதசி தோன்றிய கதை(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)கிருத யுகத்தில் வாழ்ந்து வந்த முராசுரன் என்னும் கொடூர அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி அவர்களை ஸ்வர்கத்திலிருந்து விரட்டினான். இந்திரனின் தலைமையில் எல்லா தேவர்களும் கரம் குவித்து, துதி பாடி, பாற்கடலில் பள்ளி கொண்ட சுதர்சனம் ஏந்திய கருட வாகனர் ஸ்ரீ விஷ்ணுவிடம் தங்களது குறைகளை முறையிட்டனர்.அசுரனின் கொடுமைகளைக் கேட்ட பகவான் விஷ்ணு தேவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்து, முராசுரனுடன் போரிட்டார். தனது அம்புகளாலும் சுதர்சனத்தினாலும் அசுர சேனைகளை விரட்டியடித்தார். நீண்ட காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் நடுவில், பகவான் விஷ்ணு பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஹேமவதி என்ற குகைக்குள் ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். அவரைத் தேடி அங்கு வந்த முராசுரன், (தெய்வீக) உறக்கத்திலிருந்த விஷ்ணுவிடம் போரிட விரும்பியபோது, ஸ்ரீ விஷ்ணுவின்...
Kamika Ekadashi / காமிகா ஏகாதசி( கிருஷ்ண‌பட்ச ஏகாதசி)

Kamika Ekadashi / காமிகா ஏகாதசி( கிருஷ்ண‌பட்ச ஏகாதசி)

ஆன்மீகப் பதிவு, ஏகாதசி
காமிகா ஏகாதசியின் விரத மகிமை நாம் காண்போம்.மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " மேலான பரம்பொருளே ! ஆஷாட, மாத சுக்லபட்சத்தில் வரும் புண்ணிய திதியான தேவசயனி ஏகாதசியைப் பற்றியும், அந்நாளில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிட்டும் ஒப்பற்ற பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன்.இப்பொழுது ஆஷாட ,சிராவண மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் கோவிந்தா, என் மீது கருணை கொண்டு, அந்த ஏகாதசியின் பெருமைகளை விரிவாக சொல்லுங்கள். முதன்மையான தெய்வமே, வாசுதேவா!, எனது பணிவான நமஸ்காரங்களை தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில் - " தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது பாபங்களை எல்லாம் அழித்து சுபவிளைவுகளை ஏற்படுத்தும் ஏகாதசி உபவாசத்தின் மக...
Bhaimi Ekadashi (Tamil) / பைமி (அ) ஜெய  ஏகாதசி

Bhaimi Ekadashi (Tamil) / பைமி (அ) ஜெய ஏகாதசி

ஏகாதசி
https://youtu.be/UkMTaz7h-vE தை -மாசி மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஜெயா ஏகாதசியாக கொண்டாடுவர். ஜெயா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.  மஹா தனுர்தாரியான அர்ஜூனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம்," ஹே பிரபோ! தை, மாசி மாதத்தின் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப் பற்றியும், அன்று எந்த தெய்வத்திற்கு விசேஷ அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும் என்பது பற்றியும், விரதத்தின் மஹிமை, விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலன் இவற்றைப் பற்றி விஸ்தாரமாக அறிய விரும்புகிறேன். தாங்கள் க்ருபை புரிய வேண்டும்." என்று வேண்டினான்.ஸ்ரீ கிருஷ்ணர், "ஹே பார்த்தா! தை -மாசி மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ஜெயா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த‌ ஏகாதசி விரதத்தை முறையோடு அனுஷ்டித்தால், அகாலமரணத்தால் பூத, ப்ரேத, பிசாச ரூபம் பெற்ற ஆத்மாக்கள், அந்நிலையிலிருந்து விடுதலைபெறுவர். இவ்வ...
Utthana ekadhasi (Tamil) / உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசி

Utthana ekadhasi (Tamil) / உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசி

ஏகாதசி
ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் பிரம்மாவிற்கும் நாரத முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை நாரத முனிவரிடம் பிரம்மா கூறினார். ஓ! முனிவர்களில் சிறந்தோனே! ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழித்து புண்ணியத்தை அதிகரித்து முத்தியை அளிக்கக்கூடிய உத்தான ஏகாதசியை பற்றி கூறுகிறேன், கேள். ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! கார்த்திகை மாத (அக்டோபர் / நவம்பர்) வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி இந்த உலகில் தோன்றாத வரை கங்கையின் மேன்மை மாறாமல் நிலையாக இருந்தது. மேலும் உத்தான ஏகாதசி தோன்றாதவரை கடல் மற்றும் குளங்களின் புண்ணியத்தின் செல்வாக்கு ஈடு இணையற்று இருந்தது. இதன் பொருள் என்ன வெனில் இந்த உத்தான ஏகாதசி. கங்கையின் மேன்மைக்கும் குளங்களின் புண்ணியத்திற்கும் ஈடானது, இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது. ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வத...
மோக்ஷத ஏகாதசி

மோக்ஷத ஏகாதசி

ஆன்மீகப் பதிவு, Videos, ஏகாதசி
https://youtu.be/wN9fehB9AAU மோக்ஷத ஏகாதசி மகிமைகுருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு கீதை சொல்லப்பட்ட நாள் இது என்பது மோக்ஷத ஏகாதசிக்கு மற்றொரு சிறப்பு.மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியின் மகிமையை விளக்குமாறு கிருஷ்ணரை வேண்டுகிறார் யுதிஷ்டிரர். அந்த ஆர்வமே பாவங்களைப் போக்கி மோக்ஷம் தரவல்லது என்கிறார் கிருஷ்ணர்.இப்புனித நாளில் தூபம், நெய் தீபம், நறு மலர்கள், மற்றும் துளசி மஞ்சரிகளைக் கொண்டு தாமோதரரை வணங்குதல் வேண்டும்.இதன் மகத்துவத்தைக் கேட்போரது இறந்துபோன மூதாதையர் நரகத்திற்குச் சென்றோராயினும் மீண்டு சுவர்கலோகம் செல்வர்.சம்பக நகரம் எனும் அழகிய நகரை வைக்காணசா என்னும் ஒரு பக்தி நிறைந்த மன்னன் ஆண்டு வந்தான். இறந்து போன அவன் தந்தை நரகத்தில் மிகுந்த வேதனை அனுபவிப்பதுபோல் அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது. துக்கத்தால் நெகிழ்ந்து போன மன்னன் தன் ஆலோசகர்களான அ...
Mokshada Ekadashi Tamil I மோக்ஷத ஏகாதசி / வைகுந்த ஏகாதசி (பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட நாள்)

Mokshada Ekadashi Tamil I மோக்ஷத ஏகாதசி / வைகுந்த ஏகாதசி (பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட நாள்)

ஏகாதசி
https://youtu.be/wN9fehB9AAUகுருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு கீதை சொல்லப்பட்ட நாள் இது என்பது மோக்ஷத ஏகாதசிக்கு மற்றொரு சிறப்பு.மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியின் மகிமையை விளக்குமாறு கிருஷ்ணரை வேண்டுகிறார் யுதிஷ்டிரர். அந்த ஆர்வமே பாவங்களைப் போக்கி மோக்ஷம் தரவல்லது என்கிறார் கிருஷ்ணர்.இப்புனித நாளில் தூபம், நெய் தீபம், நறு மலர்கள், மற்றும் துளசி மஞ்சரிகளைக் கொண்டு தாமோதரரை வணங்குதல் வேண்டும்.இதன் மகத்துவத்தைக் கேட்போரது இறந்துபோன மூதாதையர் நரகத்திற்குச் சென்றோராயினும் மீண்டு சுவர்கலோகம் செல்வர்.சம்பக நகரம் எனும் அழகிய நகரை வைக்காணசா என்னும் ஒரு பக்தி நிறைந்த மன்னன் ஆண்டு வந்தான். இறந்து போன அவன் தந்தை நரகத்தில் மிகுந்த வேதனை அனுபவிப்பதுபோல் அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது. துக்கத்தால் நெகிழ்ந்து போன மன்னன் தன் ஆலோசகர்களான அந்தணர்களிடம் கூ...
ஏகாதசியின் மீதான அறிவியல் பார்வை

ஏகாதசியின் மீதான அறிவியல் பார்வை

ஏகாதசி
பௌர்ணமி அல்லது அமாவாசையையடுத்த 11-ம் நாளே ஏகாதசியாகும். நவீன அறிவியலின்படி, காற்றழுத்தமானது, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மிகவும் மாறுபடுகிறது. இதை நாம், கடலலைகளின் சீற்றத்தை வைத்து உணர்ந்துகொள்ளலாம். இதனடிப்படையில், ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை இருவகைகளில் விளக்கிகூறலாம்:அறிவியலின்படி, நாம் உண்ணும் உணவு 2-3 நாட்களுக்குப் பிறகு மூளையைச்சென்றடைகிறது. நாம் ஏகாதசியன்று உண்ணும் உணவு, பௌர்ணமி அல்லது அமாவாசையன்று மூளையைச் சென்றடைகிறது  – மிக அதிகமான காற்றழுத்தம், நம்முடைய மனஓட்டம் உள்ளிட்ட பலவற்றில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதால், நம் மூளை, ஏறுமாறாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.குறைந்த காற்றழுத்தமுள்ள ஏகாதசியன்று விரதமிருப்பது, நம்முடைய ஜீரணமண்டலத்தை சுத்தமாக்குகிறது. காற்றழுத்தம் அதிகமாகவுள்ள மற்ற நாட்களில் விரதமிருப்பது, நம்முடைய ஜீரண உறுப்புகளைப் பாதிக்கலாம்.ஆக...
காமதா ஏகாதசி

காமதா ஏகாதசி

ஏகாதசி
சித்திரை (சைத்ர) மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்புக்குரிய தோழனான அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்," ஹே மதுசூதனா! உனக்கு என்னுடைய அநந்த கோடி நமஸ்காரங்கள். பிரபு, தாங்கள் தயைகூர்ந்து சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியத்தை வர்ணிக்க வேண்டுகிறேன். அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம், அவ்விரதத்தை கடைப்பிடித்து மேன்மை பெற்றவர்கள் மற்றும் அவ்விரதம் அனுஷ்டிப்பதால் எவ்வித நற்பலன்கள் கிட்டுகின்றன ஆகிய அனைத்தையும் விஸ்தாரமாக வர்ணித்துக் கூற வேண்டுகிறேன்." என்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு," ஹே ! பார்த்தா, ஒரு சமயம் குரு வசிஷ்டரிடம் ராஜா திலீபனும் இதே கேள்வியைக் கேட்டான். ஆகையால் அவர்கள் இருவரிடையே நடந்த சம்வாதத்தை (உரையாடல்) உனக்கு அப்படிய...
ஏகாதசி தோன்றிய கதை

ஏகாதசி தோன்றிய கதை

ஏகாதசி
கிருத யுகத்தில் வாழ்ந்து வந்த முராசுரன் என்னும் கொடூர அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி அவர்களை ஸ்வர்கத்திலிருந்து விரட்டினான். இந்திரனின் தலைமையில் எல்லா தேவர்களும் கரம் குவித்து, துதி பாடி, பாற்கடலில் பள்ளி கொண்ட சுதர்சனம் ஏந்திய கருட வாகனர் ஸ்ரீ விஷ்ணுவிடம் தங்களது குறைகளை முறையிட்டனர். அசுரனின் கொடுமைகளைக் கேட்ட பகவான் விஷ்ணு தேவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்து, முராசுரனுடன் போரிட்டார். தனது அம்புகளாலும் சுதர்சனத்தினாலும் அசுர சேனைகளை விரட்டியடித்தார். நீண்ட காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் நடுவில், பகவான் விஷ்ணு பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஹேமவதி என்ற குகைக்குள் ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். அவரைத் தேடி அங்கு வந்த முராசுரன், (தெய்வீக) உறக்கத்திலிருந்த விஷ்ணுவிடம் போரிட விரும்பியபோது, ஸ்ரீ விஷ்ணுவின் உடலிலிருந்து, பற்பல ஆயூதங்களுடனும் அஸ்திரங்களுடனும் ஓர் அழகான மங்களகரமான மகள் தோன்றினாள். அசுரனு...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.