ஏகாதசி தோன்றிய கதை
(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)
கிருத யுகத்தில் வாழ்ந்து வந்த முராசுரன் என்னும் கொடூர அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி அவர்களை ஸ்வர்கத்திலிருந்து விரட்டினான். இந்திரனின் தலைமையில் எல்லா தேவர்களும் கரம் குவித்து, துதி பாடி, பாற்கடலில் பள்ளி கொண்ட சுதர்சனம் ஏந்திய கருட வாகனர் ஸ்ரீ விஷ்ணுவிடம் தங்களது குறைகளை முறையிட்டனர்.
அசுரனின் கொடுமைகளைக் கேட்ட பகவான் விஷ்ணு தேவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்து, முராசுரனுடன் போரிட்டார். தனது அம்புகளாலும் சுதர்சனத்தினாலும் அசுர சேனைகளை விரட்டியடித்தார். நீண்ட காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் நடுவில், பகவான் விஷ்ணு பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஹேமவதி என்ற குகைக்குள் ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். அவரைத் தேடி அங்கு வந்த முராசுரன், (தெய்வீக) உறக்கத்திலிருந்த விஷ்ணுவிடம் போரிட விரும்பியபோது, ஸ்ரீ விஷ்ணுவின் உடலிலிருந்து, பற்பல ஆயூதங்களுடனும் அஸ்திரங்களுடனும் ஓர் அழகான மங்களகரமான மகள் தோன்றினாள். அசுரனுடன் தொடர்ந்து போரிட்ட தேவி, இறுதியில் அவனது தலையை வெட்டி வீழ்த்தினாள்.
பகவான் விஷ்ணு துயிலெழுந்த போது, முராசுரன் மரணமடைந்திருப் பதையும், தன்முன் கூப்பிய கரங்களுடன் இருக்கும் தேவியையும் கண்டு, “நீ யார்?” என்று வினவினார். “தங்கள் உடலிலிருந்து தோன்றியவள் நான், உறக்கத்திலிருந்த தங்களை இந்த அசுரன் கொல்ல முயன்றதால், நான் இவனைக் கொன்று விட்டேன்,” என்று அவள் பதிலளித்தாள். மகிழ்ச்சியுற்ற பகவான், “என்னுடைய ஆன்மீக சக்தியான நீ, ஏகாதசி (பதினொன்றாவது) திதியில் தோன்றியதால், ஏகாதசி என்று அழைக்கப்படுவாய். நீ தோன்றிய நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நிலையை அடைவர்,” என்று வரம் நல்கினார். பின்னர், சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசி, ஒவ்வொரு மாதத்திலும் இருமுறை வெவ்வேறு ரூபங்களில் தோன்றினாள்.
ஓ பிராமணர்களில் சிறந்தவர்களே, எவரொருவர் ஏகாதசி புனித விரதத்தின் மூலத்தினையும் மகத்துவத்தையும் கேட்கிறாரோ, அவர் இவுலகில் பல வித இன்பங்களையும் அனுபவிப்பதோடு விஷ்ணு லோகத்திற்கும் நேரடியாகச் செல்கிறார்.”
அர்ஜுனர் கிருஷ்ணரிடம் கேட்கிறார், “
ஓ ஜனார்தனா, ஏகாதசி நாட்களில் முழுவிரதமாகவோ, சாயங்காலம் அல்லது மதியம் ஒரு வேளையோ மட்டும் உணவு உட்கொண்டோ விரதம் மேற்கொள்வதன் புண்ணியப் பலன் என்ன? அவற்றைக்கடைப்பிடிக்கும் நெறி முறைகளும் தான் என்ன? சற்றே விளக்கமாக எடுத்துச்சொல்லுங்கள் “
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜீனனிடம் : “ஓ அர்ஜுனா! கார்த்திகை மாதம், கிருஷ்ணா பக்ஷத்தில்ஸவரும் ஏகாதசியே ஒருவர் புதிதாக ஏகாதசி விரதம் மேற்கொள்ளத் தொடங்குவதற்குஏற்றது. ஏகாதசிக்கு முன்தினமாகிய தசமி அன்று சந்தியா வேளையில் இரவு உணவுஉட்கொள்ள வேண்டும். அடுத்த நாள் காலை, விரதம் இருப்பதற்கு சங்கல்பம் எடுத்துகொள்ள வேண்டும். மதியம், நதி, ஏரி, அல்லது குளத்தில் நன்றாகக் குளிக்க வேண்டும். இவை மூன்றுமே இல்லை என்றால் கிணற்று நீரிலாவது குளிக்க வேண்டும். பூமி தேவியை நோக்கி, இவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்: “
ஓ அச்வக்ரந்தி! ஓ ராதா கிரந்தி! ஓ விஷ்ணு கிரந்தி! ஓ வசுந்தரே! ஓம்ருதிகே! ஓ பூமி மாதா! நான்முற்பிறவிகளில் இருந்து இதுவரை சேர்த்து வைத்துள்ள பாவங்களை எல்லாம் களைந்து விடுபேறு கிடைக்கச்செய் இதை சொல்லும் போது உடலில் மணல் பூசிக்கொள்ள வேண்டும். விரத நாளில், சமய நியமங்களைக் கடைப்பிடிக்க மறந்தோர், நாய் உண்போர், திருடர், உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் போன்றோருடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். வேதங்களையும், பிராமணர்களையும், தேவர்களையும், அவதூறாகப் பேசுவோருடன் பேசுவதையும் தவிர்க்க வேண்டும், தவறான பெண்களுடன் தொடர்பு கொள்வோர், கொள்ளைக்காரர், கோயில்களைக் கொள்ளை அடிப்போருடன் அறவே பேசுதல் கூடாது. இவ்வாறு எவருடனாவது பேசவோ பார்க்கவோ ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ள சூரியனை நேராகப் பார்க்க வேண்டும்.
பின்னர், முதல் தர உணவு, மலர் மற்றும், தீபம் கொண்டு தூய பக்தியுடன் கோவிந்தனை வணங்க வேண்டும் பகலில் தூங்குதல் மற்றும் உடல் உறவு இரண்டும் தவிர்க்கப் பட வேண்டும். உணவு நீர் இரண்டையும் விடுத்து விரதமிருப்போர், இசைக் கருவிகளுடன்இரவு முழுதும் பகவன் நாம கீர்த்தனம் செய்ய வேண்டும். இவ்வாறு இரவு முழுதும் விழித்து தூய பக்தியில் லயித்த பக்தன் காலையில், தேர்ந்த பிராமணர்களை வணங்கி கொடை வழங்க வேண்டும்.
பக்தியில் கருத்தூன்றி இருப்போர், சுக்ல பக்ஷ ஏகாதசி போன்றே கிருஷ்ண பக்ஷ ஏகதசியையும் முக்கியமாகக் கருத வேண்டும்.இவ்வாறு ஏகாதசி விரதம் மேற்கொண்டோர் அடையும் பலன்களை கூறுகிறேன் கேள்:
சங்கோதர க்ஷேத்ரத்தில் குளிப்பதிலும், கதாதரை நேரடியாக பார்ப்பதிலும் கிடைப்பதைபோல் 16 மடங்கு புண்ணியம் திங்கள் கிழமை வரும் பௌர்ணமி நாளில் அளிக்கும் கொடையும் சங்கராந்திஅன்று வழங்கப்படும் கொடையும் சாதாரணக் கொடையை விட நூறாயிரம்மடங்கு பெரியது. இத்தகைய பலன் இந்த ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும். சூரிய சந்திர க்ரஹனங்களில் குருக்ஷேத்ரம் செல்வதால் கிடைக்கும் பலன் இதனால் கிடைக்கும்.
அஸ்வமேத யாகத்தை விடவும் நூறு மடங்கு அதிகப் புண்ணியம், ஒரே ஒருமுறை ஏகாதசி விரதமிருப்பதால் கற்றுத்தேர்ந்த பிராமணருக்கு ஆயிரம் பசுக்களை தானம் அளித்த புண்ணியம் கிடைக்கும். பத்து நல்ல பிராமணருக்கு உணவளிப்பதை விட ஒரு ப்ரஹ்மச்சாரிக்கு உணவளிப்பது சிறந்தது. தேவை உடைய, மரியாதைக்குரிய அந்தணனுக்கு நிலம் வழங்குவது அதைவிட ஆயிரம் மடங்கு பலன் அளிக்க வல்லது.
ஒரு கன்னிப்பெண்ணை படித்த பொறுப்பான இளைங்கனுக்கு மணம் செய்து கொடுப்பது அதை விட ஆயிரம் மடங்கு பலன் அளிக்க வல்லது. பலன் ஏதும் எதிர்பாராமல் சிறு குழந்தைகளுக்கு ஆன்மீகக் கல்வி அளிப்பதுஅதை விட பத்து மடங்கு பலன் தர வல்லது. பசித்தவருக்கு உணவளிப்பது அதனினும் 10 மடங்கு சிறந்தது. அன்னதானம் முன்னோர்களையும் தேவர்களையும் சந்தோஷப் படுத்தும். இருப்பினும் ஏகாதசி விரதத்தின் பலனோ அளவிடற்கறியது.
ஏகாதசி அன்று பூரண விரதமாகவோ அல்லது ஒரு வேளை மட்டும் தானியம் பருப்பு வகைகள் சேர்க்கப்படாத உணவை மட்டும் உண்டோ விரதம் இருக்கலாம்.” என்று விளக்கினார் கிருஷ்ணர்,
“இங்ஙனம் ஏகாதசி விரதம் இருப்போருக்கு ஆன்மிக வளர்ச்சியில் தடங்கல்கள் நீக்கி வாழ்வை முழுமை உறச்செய்வேன். ஓ அர்ஜுனா,இதுவே ஏகாதசி யின் தொடக்கம். ஏகாதசிக்கு இத்தனை மகத்துவம் உள்ளது.
மஹா துவாதசியும் இதுவும் வேறல்ல. வளர்பிறை தேய்பிறை என்றபாகுபாடும் இல்லை. துவாதசி அன்று புண்டரீகாக்ஷனை வணங்கி அவன்பாதார விந்தத்தில் சமர்ப்பித்த நீரை அருந்தி விரதம் முடிக்க வேண்டும்.
துவாதசி அன்றும் ஒருவர் பகலில் தூங்குதல் தவிர்க்க வேண்டும். மற்றவர்வீட்டில் உண்பதும், ஒருவேளைக்கு மேல் உண்பதும், உடல் உறவுகொள்வதும்,
தேன் உட்கொள்வதும், உடலில் எண்ணெய் பூசிக்கொள்வதும், வெண்கலத் தட்டில் உண்பதும், உளுந்தை உணவில் சேர்ப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
இரவு பகல் ஏகாதசி துவாதசி நாட்களில் விஷ்ணுவின் லீலைகளை தூய பக்தர் சொல்லக் கேட்போர், விஷ்ணுலோகம் செல்லும் பாக்கியம் பெறுவார்
ஏகாதசி மகிமையை ஒரு வாக்கியம் ஏனும் கேட்போர், அந்தணனைக் கொள்ளுதல் போன்ற எந்த வித பாவங்களில் இருந்தும் விடுபடுவர். இதில்ஐயம் இல்லை. விஷ்ணு பகவானை வழிபட இதைவிட சிறந்த வழிவேறொன்றும் இல்லை.” இங்ஙனம் முடிந்தது, பவிஷ்ய உத்தர புராணத்தில் சொல்லப்பட்ட கிருஷ்ண ஏகாதசி அல்லது உத்பான ஏகாதசியின் மகிமை.
‘ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே
Everyone should know..nice..
Thanks🙏🙏🙏
Hare krishna