
துன்பத்தை இன்பமாக எண்ணுதல்
நான் இந்த உடலல்ல, இந்த உடலானது என்னைச் சுற்றியுள்ள ஆடையைப் போன்றது,” என்பதை உணர்ந்து, இந்த பிறப்பு இறப்பு எனும் தொடர் சுழற்சியை நிறுத்துவது எவ்வாறு என்பதுகுறித்து ஒருவன் வினவ வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீன கால மக்கள் இத்தகைய வினாக்களை எழுப்புவதில்லை. அவர்கள் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளபடி, புலனின்பத்தின் பின்னால் பித்துபிடித்து அலைகின்றனர்.
புலனின்பத்தில் பித்துப்பிடித்தவர்கள் அனைத்துவித அபத்தங்களையும் செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்களது தொடர்ச்சியான பிறப்பு இறப்பினை உறுதி செய்வதோடு, அனைத்துவித துன்பத்திற்கும் உள்ளாகின்றனர்.
உடலானது எப்போதும் துன்பத்தைத் தருகின்றது, ஆனால் இதனை நாம் புரிந்துகொள்வதில்லை. சில நேரங்களில் நாம் இன்பத்தை உணர்ந்தாலும், உண்மையில் இந்த உடலானது துன்பத்தின் இருப்பிடமாகும். இது தொடர்பான ஒப்புமை ஒன்று உள்ளது. முன்பெல்லாம் அரசாங்க அதிகாரிகள் க...