Saturday, August 23

Author: பக்தி யோகம் குழு

பகவத் கீதை – 6.16

Uncategorized
நாத்-யஷ்னதஸ் து யோகோ(அ)ஸ்தி ந சைகாந்தம் அனஷ்னத:ந சாதி-ஸ்வப்ன-ஷீலஸ்யஜாக்ரதோ நைவ சார்ஜுனSynonyms:ந — என்றுமில்லை; அதி — மிக அதிகமாக; அஷ்னத: — உண்பவனின்; து — ஆனால்; யோக — பரத்துடன் இணைவு; அஸ்தி — அமைகிறது; ந — இல்லை; ச — மேலும்; ஏகாந்தம் — எதையுமே; அனஷ்னத: — உண்ணாமல் விரதம் இருப்பவன்; ந — இல்லை; ச — மேலும்; அதி — மிக அதிகமாக; ஸ்வப்ன-ஷீலஸ்ய — உறங்குபவன்; ஜாக்ரத: — அதிகமாக விழித்திருப்பவன்; ந — இல்லை; ஏவ — என்றும்; ச — மேலும்; அர்ஜுன — அர்ஜுனா.Translation:அர்ஜுனா, எவனொருவன் மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உண்கின்றானோ, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உறங்குகின்றானோ, அத்தகையோன் யோகியாவதற்கான வாய்ப்பே இல்லை.Purport:உணவையும் உறக்கத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டுமென்று இங்கு யோகிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதிகமாக உண்பது என்றால் ஆத்மாவையும் உடலையும் சேர்ந்து வைக்க எவ்வளவு...

பகவத் கீதை – 3.20

Uncategorized
Translation:ஜனகரைப் போன்ற மன்னர்களும் நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்ததன் மூலமாகவே பக்குவமடைந்தனர். எனவே, பொது மக்களுக்கு அறிவூட்டுவதற்காகவாவது நீ உன்னுடையகடமையைச் செய்தாக வேண்டும்.Purport:ஜனகரைப் போன்ற மன்னர்கள் தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள். எனவே, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செயலாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. இருப்பினும், பொது மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் பொருட்டு அவர்களும் தங்களது கடமைகளைச் செய்தனர். ஜனகர், சீதையின் தந்தையும் பகவான் ஸ்ரீ இராமரின் மாமனாருமாவார். பகவானின் பெரும் பக்தர் என்பதால், அவர் திவ்யமான நிலையில் வீற்றிருந்தார். ஆனால் மிதிலையின் (இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஓர் உட்பிரிவு) மன்னராக இருந்ததால், விதிக்கப்பட்ட கடமைகளை செயலாற்றுவது எப்படி என்பதைத் தனது குடிமக்களுக்குக் கற்றுத்தர வேண்டியிருந்தது. பகவான் கிருஷ்ணருக்கும் அவரது நித்திய நண்பனான ...

பகவத் கீதை – 3.8

Uncategorized
Translation:உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வாயாக. செயலாற்றாமல் இருப்பதை விட இது சிறந்ததாகும். செயலின்றி இருப்பவனால் தனது உடலை கூடப் பாதுகாக்க முடியாது.Purport:பெருங்குடியில் பிறந்ததாகச் சொல்லிக் கொண்டு போலி தியானத்தில் காலம் கழிப்பவர்களும், ஆன்மீக முன்னேற்றத்திற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்டதாக பொய் வேடம் போடும் பிழைப்பாளர்களும் பலருண்டு. அர்ஜுனன் ஒரு போலியாவதை பகவான் கிருஷ்ணர் விரும்பவில்லை. சத்திரியர்களுக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை அர்ஜுனன் செய்ய வேண்டுமென்று பகவான் விரும்புகிறார். அர்ஜுனன் போர்த் தலைவனாகவும் இல்லறத்தானாகவும் திகழ்ந்ததால் தன்னுடைய நிலையிலேயே இருந்து, ஒரு கிரஹஸ்த சத்திரியனுக்குரிய தர்மங்களை நிறைவேற்றுவதே அவனுக்கு மிகச் சிறந்ததாகும். அத்தகைய செயல்கள் லௌகீக மனிதனின் இதயத்தை படிப்படியாகத் தூய்மையாக்கி, ஜடக் களங்கங்களிலிருந்து அவனை விடுவிக்கின்றன. வயிற்றுப் பிழைப்...

பகவத் கீதை – 2.27

Uncategorized
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய சதஸ்மாத் அபரிஹார்யே (அ)ர்தேநத்வம் ஷோசிதும் அர்ஹஸிSynonyms:ஜாதஸ்ய — பிறந்தவன்; ஹி — நிச்சயமாய்; த்ருவ: — உண்மை; ம்ருத்யு:—மரணம், த்ருவம்—அதுவும் உண்மை; ஜன்ம — பிறப்பு; ம்ருதஸ்ய — இறந்தவனின்; ச — மேலும்; தஸ்மாத் — எனவே; அபரிஹார்யே — தவிர்க்க முடியாதது; அர்தே — பற்றிய பொருளில்; ந — வேண்டாம்; த்வம் — நீ; ஷோசிதும் — கவலைப்பட; அர்ஹஸி — தகுதி.Translation:பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது.Purport:வாழ்வில் ஒருவன் செய்யும் செயல்களுக்கேற்ப அவன் மறுபிறவி எடுத்தாக வேண்டும். மேலும், ஒரு முறை செயல்களை முடித்த பின், மீண்டும் பிறப்பதற்காக இறந்தாக வேண்டும். இவ்வாறு முக்தியின்றி, பிறப்பும் இறப்பும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்த...

பகவத் கீதை – 2.25

Uncategorized
அவ்யக்தோ (அ)யம் அசிந்த்யோ (அ)யம்அவிகார்யோ (அ)யம் உச்யதேதஸ்மாத் ஏவம் விதித்வைனம்நானுஷோசிதும் அர்ஹஸிSynonyms:அவ்யக்த: — பார்வைக்கு எட்டாதவன்; அயம் — இந்த ஆத்மா; அசிந்தய: — சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; அயம் — இந்த அத்மா; அவிகார்ய: — மாற்றமில்லாதவன்; அயம் — இந்த ஆத்மா; உச்யதே — கூறப்படுகின்றது; தஸ்மாத் — எனவே; ஏவம் — இதுபோல; விதித்வா — அதை நன்கறிந்து; ஏனம் — இந்த ஆத்மா; ந — இல்லை; அனுஷோசிதும் — கவலைப்பட; அர்ஹஸி — நீ தக்கவன்.Translation:ஆத்மா பார்வைக்கு புலப்படாதவன், சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; மேலும், மாற்ற முடியாதவன் என்று கூறப்படுகிறது. இதனை நன்கறிந்து, நீ உடலுக்காக வருத்தப்படக் கூடாது.Purport:முன்பே கூறியபடி, ஆத்மாவின் அளவு நமது பௌதிகக் கணிதத்தின்படி மிகச் சிறியதாகும், மிகவும் சக்தி வாய்ந்த நுண்பொருள் நோக்கியாலும் அவனைக் காண முடியாது; எனவே, அவன் பார்வைக்கு புலப்படாதவன் என்று அழைக...

பகவத் கீதை – 2.22

Uncategorized
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாயநவானி க்ருஹ்ணாதி நரோ (அ)பராணிததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்-யன்யானி ஸம்யாதி நவானி தேஹிSynonyms:வாஸாம்ஸி — உடைகள்; ஜீர்ணானி — பழைய நைந்த; யதா — அதுபோல; விஹாய — புறக்கணித்து; நவானி — புதிய ஆடைகள்; க்ருஹணாதி — ஏற்பது; நர:-மனிதன், — அபராணி—மற்றவை; ததா — அதுபோலவே; ஷரீராணி — உடல்கள்; விஹாய — விட்டு; ஜீர்ணானி — பழைய, பலனற்ற; அன்யானி — வேறு; ஸம்யாதி — ஏற்றுக்கொள்கிறான்; நவானி — புதியவற்றை; தேஹி — உடல் பெற்றவன்.Translation:பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கிறது.Purport:தனிப்பட்ட அணு ஆத்மாவின் உடல் மாற்றம் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். இதயத்திலிருந்து வரும் சக்தியின் உற்பத்தி ஸ்தானத்தை விளக்க இயலாதபோதிலும், ஆத்மா இருப்பதை நம்பாதவர்களான நவீன விஞ்ஞானிகளும்கூட, குழந்தைப் பருவத்தில...

பகவத் கீதை – 2.20

Uncategorized
ந ஜாயதே ம்ரியதே வா கதாசின்நாயம் பூத்வா பவிதா வா ந பூய:அஜோ நித்ய: ஷாஷ்வதோ (அ)யம் புராணோந ஹன்யதே ஹன்யமானே ஷரீரேSynonyms:ந — என்றுமில்லை; ஜாயதே — பிறப்பு; ம்ரியதே — இறப்பு; வா — அல்லது; வா—அல்லது, கதாசித்—எக்காலத்திலும் (இறந்த, நிகழ், எதிர்), ந—என்றுமில்லை, அயம்—இந்த, பூத்வா—தோன்றியது; வா — அல்லது; ந—கிடையாது, பூய—மீண்டும் தோன்றுவது; அஜ:—பிறப்பற்றவன், நித்ய:—நித்தியமானவன், ஷாஷ்வத:—என்றும் நிலைத்திருப்பவன்; அயம் — இந்த; புராண: — மிகப் பழமையானவன்; ந — இல்லை; ஹன்யதே — கொல்லப்படுவது; ஹன்யமானே — கொல்லப்படும் போது; ஷரீரே — உடல்.Translation:ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன், உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.P...

பகவத் கீதை – 2.13

Uncategorized
தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹேகௌமாரம் யௌவனம் ஜராததா தேஹாந்தர-ப்ராப்திர்தீரஸ் தத்ர ந முஹ்யதிSynonyms:தேஹின: — உடல்பெற்ற; அஸ்மின் — இந்த; யதா — அதனால்; தேஹே — உடலில்; கௌமாரம் — சிறு வயது; யௌவனம் — இளமை; ஜரா — முதுமை; ததா — அதுபோலவே; தேஹ-அந்தர — உடல் மாறுவதும்; ப்ராப்தி:—அடைதல், தீர—நிதான புத்தியுடையவர்; தத்ர — அதைப்பற்றி; ந — என்றுமில்லை; முஹ்யதி — மயங்குதல்.Translation:தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்துசெல்வதைப் போல, ஆத்மா, மரணத்தின் போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.Purport:ஒவ்வொரு உயிர்வாழியும் தனித்தனி ஆத்மா என்பதால், ஒவ்வொருவரும் தனது உடலை ஒவ்வொரு கணமும் மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். சில நேரங்களில் சிறுவனைப் போலவும் சில நேரங்களில் இளைஞனைப் போலவும் இன்னும் சில நேரங்களில் முதியோனைப் போலவும் ...

பகவத் கீதை – 12.13,14

Uncategorized
அத்வேஷ்டா ஸர்வ–பூதானாம் மைத்ர: கருண ஏவ சநிர்மமோ நிரஹங்கார: ஸம-து:க-ஸுக: க்ஷமீஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஷ்சய : மய்-யர்பித–மனோ–புத்திர் யோ மத்-பக்த: ஸ மே ப்ரிய:வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்அத்வேஷ்டா—பொறாமையற்ற; ஸர்வ–பூதானாம்—எல்லா உயிர்களிடத்திலும்; மைத்ர:—நட்புடன்; கருண:—அன்புடன்; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்; நிர்மம:—உரிமையாளர் என்ற உணர்வின்றி; நிரஹங்கார:—அஹங்காரம் இன்றி; ஸம—சமமாக; து:க—துன்பத்திலும்; ஸுக:—இன்பத்திலும்; க்ஷமீ—மன்னித்து; ஸந்துஷ்ட:—திருப்தியுடன்; ஸததம்—எப்போதும்; யோகீ—பக்தியில் ஈடுபட்டுள்ளவன்; யத-ஆத்மா—சுய கட்டுப்பாடு; த்ருட-நிஷ்சய—உறுதியுடன்; மயி—என் மீது; அர்பித—ஈடுபடுத்தி; மன—மனதை; புத்தி:—புத்தியுடன்; ய:— எவனொருவன்; மத்-பக்த:—எனது பக்தன்; ஸ:—அவன்; மே—எனக்கு; ப்ரிய:—பிரியமானவன்.மொழிபெயர்ப்புஎவனொருவன், பொறாமை இல்லாதவனாக, எல்லா உயிர்களுக்கும் அன்பான நண...

பகவத் கீதை – 3.2

Uncategorized
Translation:இரண்டு வழிகளை ஒன்று போலக் கூறும் உமது அறிவுரையால், எனது புத்தி பேதலிக்கின்றது. எனவே, எனக்கு மிகவும் நன்மையானது எது என்பதை முடிவாகக் கூறுவீராக.Purport:பகவத் கீதைக்கு ஒரு முன்னுரையைப் போன்ற முந்தைய அத்தியாயத்தில், ஸாங்கிய யோகம், புத்தியோகம், புத்தியைக் கொண்டு புலன்களை அடக்குதல், பலன் கருதாது செயல்படுதல், புதியவரின் நிலை முதலிய பல்வேறு பாதைகள் விளக்கப்பட்டன. இவையனைத்தும் எவ்விதத் தெளிவான வரைமுறையுமின்றி கூறப்பட்டன. புரிந்து கொள்வதற்கும் செயல்படுத்துவதற்கும், முறைப்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை அவசியமாகும். எனவே, குழப்புவதைப் போலத் தெரியும் இவ்விஷயங்களை, பிழைகள் ஏதுமின்றி சாதாரண மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தெளிவுபடுத்த விரும்புகிறான் அர்ஜுனன். வார்த்தை ஜாலத்தால் அர்ஜுனனை குழப்பவேண்டுமென்ற எண்ணம் கிருஷ்ணருக்குக் கிடையாது என்ற போதிலும், கிருஷ்ண உணர்வை ஏவ்வாறு பின்பற்றுவ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.