பகவத் கீதை – 18.78
யத்ர யோகே ஷ்வர : க்ருஷ்ணோ யத்ர பார்தோ , தனுர் - தர : தத்ர ஷ் ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மமயத்ர - எங்கு ; யோகே ஷ் வர : -யோகிகளின் இறைவனான ; க்ருஷ்ண : பகவான் கிருஷ்ணர் ; யத்ர - எங்கு ; பார்த : - பிருதாவின் மைந்தனே ; தனு : தர : - வில்லையும் அம்புகளையும் ஏந்திய ; தத்ர - அங்கு ; ஸ்ரீ : - செல்வம் ; விஜய : - வெற்றி ; பூதி : - அசாதாரணமான வலிமை ; த்ருவ : - நிச்சயம் ; நீதி : நீதி ; மதி : மம - எனது அபிப்பிராயம்.யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ , உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ , அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் .பொருளுரை : பகவத் கீதை திருதராஷ்டிரரின் கேள்வியுடன் தொடங்கியது. பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாபெரும் வீரர்களின் உதவியால் தனது மகன்களது வெற்றியின் ...
