பகவத் கீதை – 18.39
யத் , அக் ரே சானுப ந்தே , ச ஸுகம் மோஹனம் ஆத்மன : நித் ராலஸ்ய -ப்ரமாதோத்தம் தத் தாமஸம் உதா ஹ்ருதம்யத்- எது : அக்ரே - ஆரம்பத்தில் ; ச - மேலும் ; அனுபந்தே - இறுதியில் ; ச - கூட ; ஸுகம் - சுகம் ; மோஹனம் - மயக்கம் ; ஆத்மன : - ஆத்மாவின் ; நித் ரா - உறக்கம் ; ஆலஸ்ய - சோம்பேறித்தனம் ; ப்ரமாத - மயக்கம் ; உத்தம் - ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட ; தத் - அந்த ; தாமஸம் - தமோ குணத்தில் ; உதா ஹ்ருதம் - இருப்பதாகக் கூறப்படுகின்றது .தன்னுணர்வைக் காண இயலாத , ஆரம்பம் முதல் இறுதி வரை மயக்கமாக இருக்கின்ற , உறக்கம் , சோம்பல் , மற்றும் மாயையினால் வருகின்ற சுகம் , தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.பொருளுரை : சோம்பல் மற்றும் உறக்கத்தில் இன்பம் காண்பவனும் , எவ்வாறு செயல்படுவது , எவ்வாறு செயல்படக் கூடாது என்பதைப் பற்றிய அறிவில்லாதவனும் , நிச்சயமாக தமோ குணத்தில் இருக்கின்றான் . தமோ குணத்தில் இருப்ப...