Thursday, May 23

பகவத் கீதை – 4.11

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

யே யதா மாம் ப்ரபத்யந்தே
தாம்ஸ் ததைவ பஜாம்-யஹம்
மம வர்த்மானுவர்தந்தே
மனுஷ்யா: பார்த ஸர்வஷ:


Synonyms:
யே — எல்லாரும்; யதா — எவ்வாறு; மாம் — என்னிடம்; ப்ரபத்யந்தே — சரணடைகின்றனரோ; தான் — அவர்களிடம்; ததா — அவ்வாறே; ஏவ — நிச்சியமாக; பஜாமி — பலனளிக்கின்றேன்; அஹம் — நான்; மம — எனது; வர்த்ம — பாதை; அனுவர்தந்தே — பின்பற்றுகின்றனர்; மனுஷ்யா: — எல்லா மனிதர்களும்; பார்த — பிருதாவின் மகனே; ஸர்வஷ: — எல்லா விதத்திலும்.


Translation:
என்னிடம் சரணடைவதற்கு ஏற்றாற் போல, நான் அனைவருக்கும் பலனளிக்கின்றேன். பிருதாவின் மகனே, எல்லா விதத்திலும் அனைவரும் என் வழியையே பின்பற்றுகின்றனர்.

Purport:
ஒவ்வொருவரும் கிருஷ்ணரை அவரது பல்வேறு தோற்றங்களின் மூலம் தேடிக் கொண்டுள்ளனர். பரம புருஷ பகவானான கிருஷ்ணர், அவரது உருவமற்ற பிரம்மஜோதியாகவும் அணுத் துகள்கள் உட்பட எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் பரமாத்மாவாகவும் ஓரளவிற்கு உணரப்படுகின்றார். ஆனால் தனது தூய பக்தரால் மட்டுமே கிருஷ்ணர் முழுமையாக உணரப்படுகிறார். எனவே, ஒவ்வொருவரது உணர்விற்கும் அவரே இலட்சியமாதலால், தத்தம் ஆவலுக்கேற்ப உறாவடுவதில் ஒவ்வொருவரும் திருப்தியடைகின்றனர். திவ்யமான உலகிலும் தனது தூய பக்தர்களுடன் அவரவர்களது விருப்பத்திற்க ஏற்ப திவ்யமான மனப்பான்மையுடன் உறவாடுகிறார். ஒரு பக்தர் கிருஷ்ணரை உன்னத எஜமானராகவும், மற்றவர் தனது நெருங்கிய தோழனாகவும், மற்றொருவர் தனது மகனாகவும், மேலும் ஒருவர் தனது காதலனாகவும் விரும்பலாம். தன்னிடம் அவர்களுக்கு உள்ள ஆழ்ந்த அன்பிற்கேற்ப, அவர் எல்லா பக்தர்களுக்கும் பாகுபாடின்றி பலனளிக்கின்றார். பௌதிக உலகிலும் இதே போன்ற உணர்வு பரிமாற்றங்கள் உண்டு. வழிபடுவோருக்கு ஏற்ப பல்வேறு வழிகளில் பகவான் சரிசமமாக பரிமாற்றம் செய்கின்றார். தூய பக்தர்கள் ஆன்மீக உலகிலும் சரி, இப்பௌதிக உலகிலும் சரி, பகவானுடன் நேரடியாக உறவு கொண்டு கைங்கர்யம் செய்வதால், அவரது அன்புத் தொண்டில் திவ்யமான ஆனந்தத்தை அடைகின்றனர். தங்களது தனித்துவத்தை இழந்து ஆன்மீகத் தற்கொலை செய்துகொள்ள விரும்பும் அருவவாதிகளுக்கும் (தனது தேஜஸில் அவர்கள் கிரகித்துக் கொள்வதன் மூலமாக) கிருஷ்ணர் உதவுகின்றார். இத்தகு அருவவாதிகள் ஆனந்தமயமான முழுமுதற் கடவுளின் நித்திய உருவத்தை ஏற்க மறுக்கின்றனர்; எனவே, தங்களது தனித்துவத்தை அழித்துக் கொண்ட இவர்களால், இறைவனின் திவ்யமான கைங்கர்யத்தில் ஆனந்தத்தை அனுபவிக்க இயலாது. இவர்களில் சிலர், அருவ நிலையிலும் ஸ்திரமாக வசிக்க இயலாமல், செயல்களுக்கான தங்களது ஆழமான விருப்பங்களை வெளிக்காட்ட மீண்டும் பௌதிகத் தளத்திற்கு திரும்பிவிடுகின்றனர். ஆன்மீக உலகங்களில் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, பதிலாக, இப்பௌதிக உலகில் செயல்பட மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது. பலனை எதிர்பார்த்து விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்பவர்களுக்கு, யாகங்களின் இறைவன் என்ற முறையில், அதற்க உண்டான பலனை அளிக்கிறார் பகவான். மேலும், சித்திகளை நாடும் யோகிகளுக்கு அத்தகு சக்திகள் அளிக்கப்படுகின்றன. வேறுவிதமாகக் கூறினால், வெற்றி பெற விரும்பும் அனைவருமே அவரது கருணையை நம்பியுள்ளனர். பலவிதமான ஆன்மீக முறைகள் அனைத்தும் ஒரே பாதையில் அடையப்படும் வெற்றியின் வெவ்வேறு நிலைகளாகும். எனவே, கிருஷ்ண உணர்வு என்னம் உயர்நத பக்கவத்தை வந்தடையும் வரை, மற்றெல்லா பயற்சிகளும் பூரணமற்றவை. இது ஸ்ரீமத் பாகவதத்தில் (2.3.10) கூறப்பட்டுள்ளது:

அகாம: ஸர்வ-காமோ வா
மோக்ஷ-காம உதா-ர-தீ:
தீவ்ரேண பக்தி-யோகேன
யஜேத புருஷம் பரம்

“ஒருவன் ஆசையற்றவனாக (பக்தனின் நிலை), எல்லாவித பலன்தரும் விளைவுகளில் ஆசையுடையவனாக, அல்லது முக்தியை விரும்புபவனாக இருந்தாலும், பக்குவத்தின் உன்னத நிலையான கிருஷ்ண உணர்வை அடைவதற்காக, எல்லா முயற்சிகளுடன் பரம புருஷ பகவானை வழிபட முயற்சிக்க வேண்டும்.”

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question