Thursday, April 18

பகவத் கீதை – 18.48

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸஹ-ஜம் கர்ம கெளந்தேய
ஸ-தோஷம் அபி ந த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி தோஷேண
தூமேனாக்னிர் இவாவ்ருதா;

ஸஹ-ஜம் – உடன் தோன்றிய; கர்ம – செயல்; கெளந்தேய – குந்தியின் மகனே; ஸ-தோஷம் – தோஷத்துடன்; அபி – இருப்பினும்; ந – என்றுமில்லை; த்யஜேத் – துறக்கப்படுவது; ஸர்வ-ஆரம்பா- எல்லா முயற்சிகளும்; ஹி – நிச்சயமாக; தோஷேண – தோஷத்துடன்; தூமேன – புகையுடன்; அக்னி: – நெருப்பு; இவ – போல; ஆவ்ருதா – மூடப்பட்டு.

நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பதைப் போல , ஒவ்வொரு முயற்சியும் ஏதேனும் ஒரு தோஷத்தால் சூழப்பட்டுள்ளது . எனவே , குந்தியின் மகனே , முழுவதும் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும் , தனது இயற்கையிலிருந்து தோன்றிய தொழிலை ஒருவன் துறக்கக் கூடாது .

பொருளுரை : கட்டுண்ட வாழ்வில் , எல்லாச் செயல்களுமே ஐட இயற் கையின் குணங்களால் களங்கமடைந்துள்ளன . ஒருவன் பிராமணனாக இருந்தாலும் , மிருகங்களை பலியிட வேண்டிய யாகங்களை அவன் செய்ய வேண்டியுள்ளது . அதுபோல எவ்வளவு புண்ணியவானாக இருந்தாலும் ஒரு சத்திரியன் தனது எதிரிகளுடன் போரிடத்தான் வேண்டும் . அவன் அதனைத் தவிர்க்க முடியாது . அதுபோல , ஒரு வியாபாரி , எவ்வளவு புண்ணியவானாக இருந்தாலும் , தனது வணிகத்தைத் தொடர்வதற்காக சில சமயங்களில் தனது இலாபத்தை மறைக்க வேண்டியுள்ளது . அல்லது கருப்புச் சந்தையில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது . இவை இன்றியமையாதவை : இவற்றை தவிர்க்க முடியாது . அதுபோல , சூத்திரன் மோசமான எஜமானனுக்கே தொண்டு செய்ய நேர்ந்தாலும் , அது செய்யத்தகாத செயலாக இருந்தாலும் , அவன் தனது எஜமானனின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் . இத்தகு குறைகளுக்கு மத்தியிலும் ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் . ஏனெனில் , அக்கடமைகள் அவனது சுபாவத்திலிருந்து தோன்றியவை.

இங்கு மிகச்சிறந்த உதாரணம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது . நெருப்பு தூய்மையானது என்றபோதிலும் , அங்கே புகையும் இருக்கின்றது . இருப்பினும் , நெருப்பினை புகை அசுத்தப்படுத்துவதில்லை . நெருப்பில் புகையிருந் தாலும் , அஃது எல்லா தனிமங்களிலும் மிகவும் தூய்மையானதாகக் கருதப் படுகின்றது . சத்திரியக் கடமையைத் துறந்து பிராமணனது தொழிலை ஏற்றுக்கொள்ள ஒருவன் விரும்பினால் , அந்த பிராமணக் கடமைகளில் விரும்பத்தகாத செயல்களைச் செய்ய வேண்டியிருக்காது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை . இதனால் , இந்த ஜடவுலகில் யாருமே ஜட இயற்கையின் களங்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டிருக்க முடியாது என்று முடிவு செய்யலாம் . இவ்விஷயத்தில் , நெருப்பு மற்றும் புகையின் உதாரணம் மிகவும் பொருத்தமானதாகும் . குளிர்காலத்தில் , நெருப்பிலிருந்து ஒரு கல்லை எடுக்கும் பொழுது , சில சமயங்களில் புகை கண்களுக்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொல்லை தருகின்றது , ஆனால் இத்தகு தொல்லைகளுக் கிடையிலும் ஒருவன் நெருப்பை உபயோகப்படுத்தித்தான் ஆக வேண்டும் . அதுபோல தனது இயற்கையான கடமையில் தொல்லை தரும் விஷயங்கள் சில இருந்தாலும் , ஒருவன் அதனை விட்டுவிடக் கூடாது . மாறாக , கிருஷ்ண உணர்வுடன் தனது கடமையைச் செய்வதன் மூலம் , பரம புருஷருக்குத் தொண்டாற்றுவதில் அவன் உறுதியுடன் இருக்க வேண்டும் . இதுவே பக்குவத்தின் நிலை . ஒரு குறிப்பிட்ட தொழில் முழுமுதற் கடவுளின் திருப்திக்காக செய்யப்படும் பொழுது , அதிலுள்ள எல்லா குற்றங்களும் தூய்மையடைகின்றன . செயலின் பலன்கள் தூய்மைப்படுத்தப்பட்டு , அவை பக்தித் தொண்டுடன் இணைக்கப்படும் பொழுது , ஒருவன் உள்ளிருக்கும் ஆத்மாவைக் காண்பதில் பக்குவமடைகின்றான் . இதுவே தன்னுணர்வு எனப்படுகிறது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question