Friday, March 29

பகவத் கீதை – 18.30

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச
கார்யாகார்யே பயாப யே
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி
புத்தி :, ஸா பார்த , ஸாத்தவிகீ

ப்ரவ்ருத்திம் – முறையான ; ச – மற்றும் ; நிவ்ருத்திம் – முறையற்ற ; ச- மற்றும் ; கார்ய- செய்யத்தக்க ; அகார்யே- செய்யத்தகாத ; பய – பயம் ; அப யே பயமின்மை ; பந்தம்- பந்தம் ; மோக்ஷம்- விடுதலை ; ச – மற்றும் ; யா – எதுவென்று ; வேத்தி – அறிகின்றானோ ; புத்தி -புத்தி ; ஸா – அந்த ; பார்த , பிருதாவின் மைந்தனே ; ஸாத்த்வி – ஸத்வ குணத்தில்.

பிருதாவின் மைந்தனே , செய்யத்தக்கது எது , செய்யத்தகாதது எது , பயப்படத்தக்கது எது , பயப்படத்தகாதது எது , பந்தப் படுத்துவது எது , விடுதலை செய்வது எது , ஆகியவற்றை அறியக்கூடிய புத்தி , ஸத்வ குணத்தில் இருப்பதாகும் .

பொருளுரை : சாஸ்திர வழிகாட்டலின்படி ஆற்றப்படும் செயல்கள் , செய்யத்தக்கவை அல்லது ப்ரவ்ருத்தி என்று அழைக்கப்படுகின்றன . அவ்வாறு வழிகாட்டப்படாத செயல்கள் , செய்யத்தகாதவை . சாஸ்திர விதிகளை அறியாதவன் , செய்யப்படும் செயல்களாலும் விளைவுகளாலும் பந்தப்படுகிறான் . புத்தியைக் கொண்டு பகுத்தறிதல் ஸத்வ குணமாகும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question