பகவத் கீதை – 2.60
யததோ ஹ்யபி கௌந்தேயபுருஷஸ்ய விபஷ் சித:இந்த்ரியாணி ப்ரமாதீனிஹரந்தி ப்ரஸபம் மன:Synonyms:யதத: — முயற்சி செய்கையில்; ஹி — நிச்சயமாக; அபி — இருந்தும்கூட; கௌந்தேய — குந்தியின் மகனே; புருஷஸ்ய — மனிதனின்; விபஷ்சித: — பகுத்தறிவு நிறைந்த; இந்த்ரியாணி — புலன்கள்; ப்ரமாதீனி — கிளர்ச்சியுட்டும்; ஹரந்தி — பலவந்தமாக; ப்ரஸபம் — வலுக்கட்டாயமாக; மன: — மனதை.Translation:அர்ஜுனா, கட்டுப்படுத்த முயலும் பகுத்தறிவுடைய மனிதனின் மனதையும், பலவந்தமாக இழுத்துச் செல்லுமளவிற்குப் புலன்கள் சக்தி வாய்ந்ததும் அடங்காததுமாகும்.Purport:கற்றறிந்த முனிவர்கள், தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள் என்று பலரும் புலன்களை வெற்றி கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால் தங்களது முயற்சிகளுக்கு மத்தியிலும், மனக் கிளர்ச்சியின் காரணமாக, இவர்களில் மிகச்சிறந்தவர்களும் பௌதிகப் புலனின்பத்திற்கு இரையாகி விடுகின்றனர். கடுமையான தவத்தையும் யோகப...