கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 6 I Gita mahatmiya Chapter-6
https://youtu.be/UXuQdtKOnrI
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஆறாம் அத்தியாயத்தின் மஹிமை
பகவான் விஷ்ணு கூறினார், "இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். யாரொருவர் இந்த விளக்கத்தை கேட்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக பௌதிக களங்கங்களிலிருந்து விடுதலை அடைவார்கள்".
கோதாவரி நதிக்கரையில் பிரதிஸ்தான்பூர் என்ற ஊர் உள்ளது. அங்கு நான் பிப்பலேசன் என்று அழைக்கப்படுகிறேன். அந்த ஊரின் அரசர் பெயர் ஞானஸ்ருதி; அவர் மிகவும் நர்குணங்கள் படைத்தவர். ஆகையால் மக்கள் அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அவர் நாள்தோறும் பிரமாண்டமான யாகங்களை செய்வார். எவ்வளவு பிரமாண்டம் என்றால் யாககுண்டத்திலிருந்து எழும் புகையானது, தேவலோகத்தின் நந்தவனத்திலுள்ள கல்பவிருக்ஷ மரங்களை மூடி கறுப்பாக்கும். பார்ப்பதற்கு அந்த மரங்கள் மன்னர் ஞானஸ்ருதிக்கு மரியாத...