
நாராயண கவசம் / Narayana Kavacha
ஸ்ரீமத் பாகவதம் / ஆறாம் காண்டம்பதம் 12ஓம் ஹரிர் விதத்யான் மம ஸர்வ-ரக்ஷாம்ன்யஸ்தாங்ரி-பத்ம: பதகேந்ர-ப்ரூஷ்டேதராரி-சர்மாஸி-கதேஷு-ாப-பாசா ததானோ ‘ஷட்-குணோ ‘ஷ்ட-பாஹு:மொழிபெயர்ப்புதமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார்.பதம் 13ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்ய-மூர்த்திர்யாதோ-கணேப்யோ வருணஸ்ய பாசாத்ஸ்தாலேஷு மாயாவடு-வாமனோ ‘வ்யாத்த்ரிவிக்ரம: கே ‘வது விஸ்வரூப:மொழிபெயர்ப்புமிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வ...