Kuralin Kural – Paramatma (Tamil) / குறளின் குரல் – பரமாத்மா
நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை பகவத் கீதையின் பதின்மூன்று, பதினைந்தாவது அத்யாயங்கள் உறுதி செய்கின்றன."மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ் வார்"- (திருக்குறள் 3)"இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்".எல்லா உலகங்கட்கும் அவைகளில் உள்ள உயிர்கட்கும் காரணமான முழுமுதற்கடவுளாகிய ஆதி பகவான் இதயத்தியிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனைப் பரமாத்மா என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. இங்கே வீடு என்பது நிலையான அழிவற்ற உல்கமாகிய வைகுந்தத்தைக் குறிக்கிறது.உபத்ரஷ்டானு மந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர:பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே ஸ்மின் புருஷ: பர:"*(பகவத் கீதை 13....