
Jagannatha Dasa Babaji
ஸ்ரீல ஜெகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜாஸ்ரீல ஜெகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜா நூற்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் ஸ்ரீ மதுசூதன தாஸ பாபாஜியிடமிருந்து தீக்ஷை (ஆன்மீக உபதேசம்) பெற்று, பிருந்தாவனத்தில் உள்ள சூர்ய குண்டத்தில் பல ஆண்டுகள் பஜனை செய்தார். தாகூர் பக்திவினோத, ஜெகந்நாத தாஸ பாபாஜியிடமிருந்து தூய பக்தி சேவையைப் பற்றிய மதிப்புமிக்க உபதேசங்களைப் பெற்றார்.அவர் ஸ்ரீ நவத்வீப தாமத்தில் ஆறு மாதங்களும், விரஜ மண்டலத்தில் ஆறு மாதங்களும் வசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். "அவரது காலத்தில், ஸ்ரீ ஜெகந்நாத தாஸ பாபாஜி கௌர மற்றும் விரஜ மண்டலங்களிலும், புருஷோத்தம க்ஷேத்திரத்திலும் (ஜெகந்நாத பூரி) மிகவும் முன்னேறிய ரசிக வைஷ்ணவராக இருந்தார்" என்று தாகூர் பக்திவினோத கூறியுள்ளார். பக்திவினோத தாகூர் அவருக்கு 'ஸார்வபௌமா' (வைஷ்ணவர்களின் தலைவர்) என்ற பட்டத்தை வழங்கினார்.தீவிர பக்தி மற்றும் லீ...









