
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 18 I Gita mahatmiya Chapter-18
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினெட்டாம் அத்தியாயத்தின் மஹிமை பார்வதி தேவி, சிவபெருமானிடம், "அன்பான கணவரே ! தாங்கள் இதுவரை ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறினீர்கள். இப்பொழுது தயை கூர்ந்து பதினெட்டாம் அத்தியாயத்தின் மகத்துவத்தை பற்றி எடுத்துரைப்பீர்களாக" என்று கூறினார். சிவபெருமான் கூறினார், "இமையத்தின் புதல்வியே (பார்வதி) ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தின் மகிமைகளை கேட்பாயாக. இது அணைத்து வேதங்களை காட்டிலும் சிறந்ததாகும்; நித்தியமான ஆனந்தத்தை அளிக்கக்கூடியதாகும்; இந்த மகிமைகளை கேட்கும் எவரும் பௌதிக ஆசைகளை துறப்பர்; தூய்மையான ஒரு பக்தருக்கு இது அமிர்தமாகும்; பகவான் விஷ்ணுவின் உயிராகும்; தேவேந்திரருக்கும் மற்றும் அணைத்து தேவர்களுக்கும், சனகர் மற்றும் சனந்தர் போன்ற யோகிகளுக்கும் இத...