Tuesday, November 3

Author: பக்தி யோகம் குழு

பகவத் கீதை – 4.10

Uncategorized
வீத-ராக-பய-க்ரோதாமன் மயா மாம் உபாஷ்ரிதா:பஹவோ க்ஞான-தபஸாபூதா மத்-பாவம் ஆகதா:Synonyms:வீத — விடுபட்டு; ராக — பற்றுதல்; பய — பயம்; க்ரோதா — கோபம்; மன்-மயா — முழுதும் என்னில்; மாம் — என்னில்; உபாஷ்ரிதா: — முழுக்க நிலைபெற்று; பஹவ: — பலர்; க்ஞான — ஞானம்; தபஸா — தவத்தால்; பூதா:— தூய்மைபெற்று; மத்-பாவம் — என் மீதான திவ்யமான அன்பினை; ஆகதா: — அடைந்துள்ளனர்.Translation:பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு, முழுதும் என்னில்லயித்து, என்னை சரணடைந்த பற்பல நபர்கள் என்னைப் பற்றிய அறிவால் இதற்கு முன் தூய்மையடைந்துள்ளனர். இவ்வாறாக, அவர்கள் எல்லாரும் என் மீது திவ்யமான அன்புடையவர்களாயினர்.Purport:மேலே கூறப்பட்டுள்ளபடி, பௌதிகத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவன், பரம பூரண உண்மையின் வியக்தித்துவத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகும். உடலைச் சார்ந்த வாழ்வில் பற்றுக் கொண்டுள்ள மக்கள், பர...

பகவத் கீதை – 9.29

Uncategorized
ஸமோ (அ)ஹம் ஸர்வ-பூதேஷுந மே த்வேஷ்யோ (அ)ஸ்தி ந ப்ரிய:யே பஜந்தி து மாம் பக்த்யாமயி தே தேஷு சாப்-யஹம்Synonyms:ஸம — சமமானவன்; அஹம் — நான்; ஸர்வ-பூதேஷு — எல்லா உயிரினங்களுக்கும்; ந — யாருமில்லை; மே — எனக்கு; த்வேஷ்ய: — வெறுக்கின்ற; அஸ்தி — இருக்கின்றனர்; ந — இல்லை; ப்ரிய: — பிரியமான; யே — யாரொருவர்; பஜந்தி — திவ்யமான தொண்டில் ஈடுபட்டவர்; து — ஆயினும்; மாம் — எனக்கு; பக்த்ய — பக்தியில்; மயி — என்னில் உள்ளனர்; தே — அத்தகையோர்; தேஷு — அவர்களில்; ச — கூட; அபி — நிச்சயமாக; அஹம் — நான்.Translation:நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ, பாரபட்சம் காட்டுவதோ இல்லை. நான் அனைவருக்கும் சமமானவன். ஆயினும் பக்தியுடன் எனக்கு அன்புத் தொண்டு புரிபவன் யாராயினும், அவன் எனது நண்பன். அவன் என்னில் இருக்கிறான். நானும் அவனுக்கு நண்பனாகிறேன்.Purport:கிருஷ்ணர் எல்லாருக்கும் சமமானவர், அவருக்கு விசேஷமான நண்...

பகவத் கீதை – 6.32

Uncategorized
ஆத்மௌபம்யேன ஸர்வத்ரஸமம் பஷ்யதி யோ (அ)ர்ஜுனஸுகம் வா யதி வா து:கம்ஸ யோகீ பரமோ மத:Synonyms:ஆத்ம — ஆத்மா; ஔபம்யேன — ஒப்பீட்டால்; ஸர்வத்ர — எங்கும்; ஸமம் — சமத்துவம்; பஷ்யதி — காண்கிறான்; ய: — எவனொருவன்; அர்ஜுனா — அர்ஜுனனே; ஸுகம் — சுகம்; வா — அல்லது; யதி — ஆனால்; வா — அல்லது; து:கம் — துக்கம்; ஸ: — அத்தகு; யோகீ — யோகி; பரம: — பரம; மத: — கருதப்படுகிறான்.Translation:அர்ஜுனா, எவனொருவன் எல்லா உயிர்களுடைய சுக துக்கங்களை தன்னுடன் ஒப்பிட்டுக் காண்கிறானோ, அவன் பரம யோகியாகக் கருதப்படுகிறான்.Purport:கிருஷ்ண உணர்வில் இருப்பவனே பரம யோகியாவான்; அவன் தனது சுய அனுபவத்தால் எல்லாருடைய சுக துக்கததையும் அறிவான். உயிர்வாழி துன்பப்படுவதற்கான காரணம், இறைவனுடனான தனது உறவை மறந்திருப்பதே. மேலும், மகிழ்ச்சிக்கான காரணம், கிருஷ்ணரே மனிதனின் எல்லாச் செயல்களுக்கும் உன்னத அனுபவிப்பாளர், கிருஷ்ணரே...

பகவத் கீதை – 5.19

Uncategorized
இஹைவ தைர் ஜித: ஸர்கோயேஷாம் ஸாம்யே ஸ்திதம் மன:நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்மதஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:Synonyms:இஹ — இவ்வாழ்வில்; ஏவ — நிச்சியமாக; தை: — அவர்களால்; ஜித: — வெல்லப்பட்டு; ஸர்க: — பிறப்பும் இறப்பும்; யேஷாம் — அவர்களது; ஸாம்யே — சமநோக்கில்; ஸ்திதம் — நிலைபெற்று; மன: — மனம்; நிர்தோஷம் — தோஷமில்லாத; ஹி — நிச்சியமாக; ஸமம் — சமத்துவதில்; ப்ரஹ்ம — பிரம்மனைப் போன்று; தஸ்மாத் — எனவே; ப்ரஹ்மணி — பிரம்மனில்; தே — அவர்கள்; ஸ்திதா: — நிலைபெற்றுள்ளனர்.Translation:ஒருமையிலும் சமத்துவத்திலும் மனதை நிலைநிறுத்தியவர்கள், பிறப்பு இறப்பின் நியதிகளை ஏற்கனவே வென்றுவிட்டனர். பிரம்மனைப் போன்றே தோஷமற்று இருப்பதால், அவர்கள் ஏற்கனவே பிரம்மனில் நிலைபெற்றவர்கள்.Purport:மேலே கூறப்பட்டது போன்று, மனதில் சம நிலையுடன் இருப்பது தன்னுணர்வின் அறிகுறியாகும். அத்தகு நிலையை உண்மையில் அடைந்தவர்கள், ஜ...

பகவத் கீதை – 5.18

Uncategorized
வித்யா-வினய-ஸம்பன்னேப்ராஹ்மணே கவி ஹஸ்தினிஷுனி சைவ ஷ்வ-பாகே சபண்டிதா: ஸம-தர்ஷின:Synonyms:இஹ — இவ்வாழ்வில்; ஏவ — நிச்சியமாக; தை: — அவர்களால்; ஜித: — வெல்லப்பட்டு; ஸர்க: — பிறப்பும் இறப்பும்; யேஷாம் — அவர்களது; ஸாம்யே — சமநோக்கில்; ஸ்திதம் — நிலைபெற்று; மன: — மனம்; நிர்தோஷம் — தோஷமில்லாத; ஹி — நிச்சியமாக; ஸமம் — சமத்துவதில்; ப்ரஹ்ம — பிரம்மனைப் போன்று; தஸ்மாத் — எனவே; ப்ரஹ்மணி — பிரம்மனில்; தே — அவர்கள்; ஸ்திதா: — நிலைபெற்றுள்ளனர்.Translation:அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு யானை, நாய், நாயைத் தின்பவன் (கீழ் ஜாதி) என அனை வரையும் சம நோக்கில் காண்கின்றனர்.Purport:உயிரின வேறுபாடுகளையும் , ஜாதி வேறுபாடுகளையும் கிருஷ்ண பக்தன் காண்பதில்லை. சமூக ரீதியில், பிராமணனும் கீழ் ஜாதியினனும் வேறுபட்டவை. உயிரின ரீதியில், ...

பகவத் கீதை – 6.16

Uncategorized
நாத்-யஷ்னதஸ் து யோகோ(அ)ஸ்தி ந சைகாந்தம் அனஷ்னத:ந சாதி-ஸ்வப்ன-ஷீலஸ்யஜாக்ரதோ நைவ சார்ஜுனSynonyms:ந — என்றுமில்லை; அதி — மிக அதிகமாக; அஷ்னத: — உண்பவனின்; து — ஆனால்; யோக — பரத்துடன் இணைவு; அஸ்தி — அமைகிறது; ந — இல்லை; ச — மேலும்; ஏகாந்தம் — எதையுமே; அனஷ்னத: — உண்ணாமல் விரதம் இருப்பவன்; ந — இல்லை; ச — மேலும்; அதி — மிக அதிகமாக; ஸ்வப்ன-ஷீலஸ்ய — உறங்குபவன்; ஜாக்ரத: — அதிகமாக விழித்திருப்பவன்; ந — இல்லை; ஏவ — என்றும்; ச — மேலும்; அர்ஜுன — அர்ஜுனா.Translation:அர்ஜுனா, எவனொருவன் மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உண்கின்றானோ, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உறங்குகின்றானோ, அத்தகையோன் யோகியாவதற்கான வாய்ப்பே இல்லை.Purport:உணவையும் உறக்கத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டுமென்று இங்கு யோகிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதிகமாக உண்பது என்றால் ஆத்மாவையும் உடலையும் சேர்ந்து வைக்க எவ்வளவு...

பகவத் கீதை – 3.20

Uncategorized
Translation:ஜனகரைப் போன்ற மன்னர்களும் நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்ததன் மூலமாகவே பக்குவமடைந்தனர். எனவே, பொது மக்களுக்கு அறிவூட்டுவதற்காகவாவது நீ உன்னுடையகடமையைச் செய்தாக வேண்டும்.Purport:ஜனகரைப் போன்ற மன்னர்கள் தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள். எனவே, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செயலாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. இருப்பினும், பொது மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் பொருட்டு அவர்களும் தங்களது கடமைகளைச் செய்தனர். ஜனகர், சீதையின் தந்தையும் பகவான் ஸ்ரீ இராமரின் மாமனாருமாவார். பகவானின் பெரும் பக்தர் என்பதால், அவர் திவ்யமான நிலையில் வீற்றிருந்தார். ஆனால் மிதிலையின் (இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஓர் உட்பிரிவு) மன்னராக இருந்ததால், விதிக்கப்பட்ட கடமைகளை செயலாற்றுவது எப்படி என்பதைத் தனது குடிமக்களுக்குக் கற்றுத்தர வேண்டியிருந்தது. பகவான் கிருஷ்ணருக்கும் அவரது நித்திய நண்பனான ...

பகவத் கீதை – 3.8

Uncategorized
Translation:உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வாயாக. செயலாற்றாமல் இருப்பதை விட இது சிறந்ததாகும். செயலின்றி இருப்பவனால் தனது உடலை கூடப் பாதுகாக்க முடியாது.Purport:பெருங்குடியில் பிறந்ததாகச் சொல்லிக் கொண்டு போலி தியானத்தில் காலம் கழிப்பவர்களும், ஆன்மீக முன்னேற்றத்திற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்டதாக பொய் வேடம் போடும் பிழைப்பாளர்களும் பலருண்டு. அர்ஜுனன் ஒரு போலியாவதை பகவான் கிருஷ்ணர் விரும்பவில்லை. சத்திரியர்களுக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை அர்ஜுனன் செய்ய வேண்டுமென்று பகவான் விரும்புகிறார். அர்ஜுனன் போர்த் தலைவனாகவும் இல்லறத்தானாகவும் திகழ்ந்ததால் தன்னுடைய நிலையிலேயே இருந்து, ஒரு கிரஹஸ்த சத்திரியனுக்குரிய தர்மங்களை நிறைவேற்றுவதே அவனுக்கு மிகச் சிறந்ததாகும். அத்தகைய செயல்கள் லௌகீக மனிதனின் இதயத்தை படிப்படியாகத் தூய்மையாக்கி, ஜடக் களங்கங்களிலிருந்து அவனை விடுவிக்கின்றன. வயிற்றுப் பிழைப்...

பகவத் கீதை – 2.27

Uncategorized
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய சதஸ்மாத் அபரிஹார்யே (அ)ர்தேநத்வம் ஷோசிதும் அர்ஹஸிSynonyms:ஜாதஸ்ய — பிறந்தவன்; ஹி — நிச்சயமாய்; த்ருவ: — உண்மை; ம்ருத்யு:—மரணம், த்ருவம்—அதுவும் உண்மை; ஜன்ம — பிறப்பு; ம்ருதஸ்ய — இறந்தவனின்; ச — மேலும்; தஸ்மாத் — எனவே; அபரிஹார்யே — தவிர்க்க முடியாதது; அர்தே — பற்றிய பொருளில்; ந — வேண்டாம்; த்வம் — நீ; ஷோசிதும் — கவலைப்பட; அர்ஹஸி — தகுதி.Translation:பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது.Purport:வாழ்வில் ஒருவன் செய்யும் செயல்களுக்கேற்ப அவன் மறுபிறவி எடுத்தாக வேண்டும். மேலும், ஒரு முறை செயல்களை முடித்த பின், மீண்டும் பிறப்பதற்காக இறந்தாக வேண்டும். இவ்வாறு முக்தியின்றி, பிறப்பும் இறப்பும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்த...

பகவத் கீதை – 2.25

Uncategorized
அவ்யக்தோ (அ)யம் அசிந்த்யோ (அ)யம்அவிகார்யோ (அ)யம் உச்யதேதஸ்மாத் ஏவம் விதித்வைனம்நானுஷோசிதும் அர்ஹஸிSynonyms:அவ்யக்த: — பார்வைக்கு எட்டாதவன்; அயம் — இந்த ஆத்மா; அசிந்தய: — சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; அயம் — இந்த அத்மா; அவிகார்ய: — மாற்றமில்லாதவன்; அயம் — இந்த ஆத்மா; உச்யதே — கூறப்படுகின்றது; தஸ்மாத் — எனவே; ஏவம் — இதுபோல; விதித்வா — அதை நன்கறிந்து; ஏனம் — இந்த ஆத்மா; ந — இல்லை; அனுஷோசிதும் — கவலைப்பட; அர்ஹஸி — நீ தக்கவன்.Translation:ஆத்மா பார்வைக்கு புலப்படாதவன், சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; மேலும், மாற்ற முடியாதவன் என்று கூறப்படுகிறது. இதனை நன்கறிந்து, நீ உடலுக்காக வருத்தப்படக் கூடாது.Purport:முன்பே கூறியபடி, ஆத்மாவின் அளவு நமது பௌதிகக் கணிதத்தின்படி மிகச் சிறியதாகும், மிகவும் சக்தி வாய்ந்த நுண்பொருள் நோக்கியாலும் அவனைக் காண முடியாது; எனவே, அவன் பார்வைக்கு புலப்படாதவன் என்று அழைக...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.