பகவத் கீதை – 9.30
அபி சேத் ஸு-துராசாரோபஜதே மாம் அனன்ய-பாக்ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய:ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:Synonyms:அபி — இருந்தும்; சேத் — கூட; ஸு-துராசார: — மிகவும் மோசமான செயல்களைச் செய்பவன்; பஜதே — பக்தித் தொண்டில் ஈடுபட்டு; மாம் — எனக்கு; அனன்ய-பாக் — பிறழாமல்; ஸாது: — சாது; ஏவ — நிச்சயமாக; ஸ: — அவன்; மந்தவ்ய: — கருதப்பட வேண்டும்; ஸம்யக் — முழுமையாக; வ்யவஸித: — தீர்மானத்தில் திடமாக; ஹி — நிச்சயமாக; ஸ: — அவன்.Translation:ஒருவன் மிகவும் மோசமான செயலைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் பிறழாது ஈடுபட்டிருந்தால், அவனை சாதுவாகவே கருத வேண்டும்; ஏனெனில், அவன் தனது தீர்மானத்தில் திடமாக உள்ளான்.Purport:இப்பதத்திலுள்ள ஸு-துராசார என்னும் சொல் மிகவும் முக்கியமானதாகும், இச்சொல்லை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். உயிர்வாழி கட்டுண்ட நிலையில் இருக்கும்போது, அவனுக்கு இரண்டு விதமான செயல்கள் உண்டு...