பகவத் கீதை – 5.22
யே ஹி ஸம்ஸ்பர்ஷ-ஜா போகாது: க-யோனய ஏவ தேஆத்-யந்தவந்த: கௌந்தேயந தேஷு ரமதே புத:Synonyms:யே — அவர்கள்; ஹி — நிச்சயமாக; ஸம்ஸ்பர்ஷ-ஜா — ஜடப் புலன்களின் தொடர்பினால்; போகா — இன்பம்; து: க — இன்பம்; யோனய: — மூலமான; ஏவ — நிச்சயமாக; தே — அவை; ஆதி — முதல்; அந்த — முடிவு; வந்த: — உட்பட்டவை; கௌந்தேய — குந்தியின் மகனே; ந — என்றுமில்லை; தேஷு — அவற்றில்; ரமதே — மகிழ்வடைவது; புத: — புத்தியுடையோர்.Translation:ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இத்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.Purport:பௌதிக புலன்களின் தொடர்பால் உண்டாகும் பௌதிக புலனின்பங்கள், தற்காலிகமானதாகும். ஏனெனில், உடலே தற்காலிக மானதுதானே. முக்தி பெற்ற ஆத்மா நிலையற்ற எதிலும் ஆர்...