பகவத் கீதை – 6.26
யதோ யதோ நிஷ்சலதிமனஷ் சஞ்சலம் அஸ்திரம்ததஸ் ததோ நியம்யைதத்ஆத்மன்-யேவ வஷம் நயேத்Synonyms:யத: யத: — எங்கெல்லாம்; நிஷ்சலதி — மிகவும் கிளர்ச்சியடைகின்றதோ; மன: — மனம்; சஞ்சலம் — சஞ்சலம்; அஸ்திரம் — ஸ்திரமின்றி; தத: தத: — அங்கிருந்து; நியம்ய — ஒழுங்குப்படுத்தி; ஏதத் — இந்த; ஆத்மனி — ஆத்மாவில்; ஏவ — நிச்சயமாக; வஷம் — கட்டுப்பாட்டில்; நயேத் — கொண்டு வர வேண்டும்.Translation:மனம் தனது சஞ்சலமான நிலையற்ற தன்மையால் எங்கெல்லாம் சஞ்சரிக்கின்றதோ, அங்கிருந்தெல்லாம் மனதை இழுத்து மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.Purport:மனதின் இயற்கை சஞ்சலமானதும் நிலையற்றதுமாகும். ஆனால் தன்னுணர்வு அடைந்த யோகி மனதைக் கட்டுப்படுத்த வேண்டும், மனதினால் கட்டப்படுத்தப்படக் கூடாது. மனதை (அதன்மூலம் புலன்களையும்) கட்டுப்படுத்துபவன், கோஸ்வாமி அல்லது ஸ்வாமி என்று அழைக்கப்படுகின்றான், மனதால் கட்டப்பட...