த்ரி-விதம் நரகஸ்யேதம்
த்வாரம் நாஷனம் ஆத்மன ;
காம: க்ரோத ஸ் ததா லோப ஸ்
தஸ்மாத் , ஏதத் த்ரயம் த்யஜே
த்ரி – விதம் – மூன்று விதமான ; நரகஸ்ய – நரகத்தின் ; இதம் – இந்த ; தவாரம் –கதவு ; நாஷ னம்- அழிக்கக்கூடிய ; ஆத்மன : – ஆத்மாவை ; காம : — காமம் ; க்ரோத : — கோபம் ; ததா – அதுபோன்றே ; லோப : – பேராசை : தஸ்மாத்- எனவே ; ஏதத் – இந்த ; த்ரயம் – மூன்றையும் ; த்யஜேத்- ஒருவன் துறக்க வேண்டும் .
காமம் , கோபம் , பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டுச் செல்லும் மூன்று கதவுகளாகும் . இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால் , ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும்.
பொருளுரை : அசுரத்தனமான வாழ்வின் ஆரம்பம் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது . தனது காமத்தைத் திருப்தி செய்ய ஒருவன் முயல்கின்றான் , அவனால் அது முடியாதபோது , கோபமும் பேராசையும் எழுகின்றன .அசுரத்தனமான உயிரினங்களுக்கு வீழ்ச்சியடைய விரும்பாத அறிவுள்ள மனிதன் , இந்த மூன்று விரோதிகளையும் துறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் , இவை இந்த பௌதிக பந்தத்திலிருந்து முக்தி பெறுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லாதபடி ஆத்மாவைக் கொல்லக்கூடியவை .