Thursday, March 28

பகவத் கீதை – 18.26

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

முக்த ஸங்கோ ( அ) நஹம்-வாதீ , த்ருத்-யுத்ஸாஹ-ஸமன்வித:
ஸித்த்-யஸித் த் யோர் நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே

முக்க லங்க : – எல்லா பௌதிக உறவிலிருந்தும் விடுபட்டு; அனஹம் வாதி – அஹங்காரம் இன்றி ; த்ருதி – மன உறுதி ; உத்ஸாஹ – பெரும் உற்சாகத்துடன் ; ஸமன்வித : – தகுதிபெற்று ; ஸித்தி – வெற்றியில் ; அஸித்தயோ : — தோல்வியில் ; நிர்விகார : – மாற்றமின்றி ; கர்நா- செய்பவன் : ஸாத்த்விக : – ஸத்வ குணத்தில் , உச்யதே – இருப்பதாகக் கூறப்படுகின்றான்.

எவனொருவன் , இயற்கை குணங்களின் தொடர்பின்றி , அஹங்காரமின்றி , உற்சாகம் மற்றும் மனவுறுதியுடன் , வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது தனது செய்கின்றானோ , அத்தகு செயலாளி ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது .

பொருளுரை : கிருஷ்ண உணர்விலிருப்பவன் ஜட இயற்கையின் குணங் களுக்கு எப்போதும் அப்பாற்பட்டவன் . அவனிடம் ஒப்படைக்கப்பட்ட செயலின் பலன்களை அவன் எதிர்பார்ப்பதில்லை ; ஏனெனில் , அஹங்காரம் மற்றும் கர்வத்திலிருந்து அவன் உயர்வு பெற்றவன் . இருப்பினும் , அத்தகு செயல்கள் முடியும்வரை அவன் எப்போதும் உற்சாகத்துடன் உள்ளான் . தான் மேற்கொள்ளும் சிரமத்தைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை ; எப்போதும் உற்சாகத்துடன் உள்ளான் . வெற்றி தோல்விகளைப் பற்றியும் அவன் கவலைப்படுவதில்லை ; இன்ப துன்பங்களில் அவன் சமமாக உள்ளான் . இவ்வாறு செயல்படுபவன் ஸத்வ குணத்தில் நிலைபெற்றுள்ளான் .

+2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question