Wednesday, October 30

பகவத் கீதை – 16.4

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தம்போ தர்போ (அ) பிமானஷ் ச
க்ரோத: பாருஷ்யம் ஏவ ச
அக்ஞானம் சாபி ஜாதஸய
பார்த ஸம்பதம் ஆஸுரீம்

தம்ப: – தற்பெருமை; தர்ப : – அகந்தை , அபி மான : வீண் அபிமானம் ,ச – மேலும் , க்ரோத: – கோபம் , பாருஷ்யம் – கொடூரம்; ஏவ – நிச்சயமாக; ச – மற்றும்; அக்ஞானம் – அறியாமை; ச – மற்றும்; அபிஜாதஸ்ய – பிறந்தவனின் ; பார்த – பிருதாவின் மைந்தனே ; ஸம்பதம் – குணங்கள் ; ஆஸுரீம் – அசுர இயற்கையின்.

பிருதாவின் மைந்தனே , தற்பெருமை , அகந்தை , வீண் அபிமானம் , கோபம் , கொடூரம் , அறியாமை ஆகியவை அசுர இயல்புடையவர்களின் குணங்களாகும் .

பொருளுரை : இப்பதத்தில் நரகத்திற்கான ராஜ பாதை விவரிக்கப் பட்டுள்ளது . கொள்கைகளைப் பின்பற்றாவிடினும் , ஆன்மீக ஞானத்தில் முன்னேற்றம் பெறுவதாகவும் தர்மத்தைப் பின்பற்றுவதாகவும் அசுரர்கள் வெறும் படம் காட்டுகின்றனர் . ஓரளவு கல்வியையோ மிகுந்த செல்வத் தையோ அடைந்துவிட்டால் , அவர்கள் எப்போதும் கர்வத்துடனும் அகந்தை யுடனும் இருப்பர் . மற்றவர்கள் தம்மை வழிபட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர் . பிறரால் மதிக்கப்படுவதற்கான தகுதி அவர்களிடம் இல்லாவிடினும் , மதிப்பளிக்கும்படி வற்புறுத்துகின்றனர் . அவர்கள் அற்பமான விஷயங்களில் மிகவும் கோபமுற்று கொடூரமாகப் பேசுகின்றனர் , கண்ணியமாக நடந்து கொள்வதில்லை . எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதை அவர்கள் அறிவதில்லை . தங்களது சொந்த விருப்பத்தின்படி , மனம் போன போக்கில் எதையும் செய்கின்றனர் . எந்த ஓர் அதிகாரியையும் அவர்கள் ஏற்பதில்லை . தாயின் கருவில் அவர்களது உடல் தொடங்கியதிலிருந்து இந்த அசுர குணங்கள் உள்ளன, மேலும், அவர்கள் வளரும்போது இந்த குணங்களும் வளர்ந்து அமங்களமான் இத்தன்மைகளை வெளிப்படுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question