Thursday, April 3

ஏகாதசி

Papamochani Ekadashi (Tamil) / பாபமோசனி ஏகாதசி

Papamochani Ekadashi (Tamil) / பாபமோசனி ஏகாதசி

ஏகாதசி
பாபமோசனி ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.அர்ஜூனன், பரமாத்மா கிருஷ்ணரிடம்," மதுசூதனா ! ஒவ்வொரு ஏகாதசி விரத மஹாத்மிய கதைகளைக் கேட்டு, மனம் ஆனந்தத்தால் உற்சாகம் அடைவதுடன் மற்ற ஏகாதசி மஹாத்மிய கதைகளையும் அறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது.ஸ்ரீ கிருஷ்ண கோபாலா!, தாங்கள் கிருபை புரிந்து சித்திரை (சைத்ர) மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி விரத மஹாத்மியத்தை பற்றி கூற வேண்டுகிறேன். அந்த ஏகாதசி, எந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றது, அன்று எந்த தெய்வத்திற்கு பூஜை ஆராதனை செய்ய வேண்டும், விரதம் அனுஷ்டிப்பதற்கான விதிமுறை, இவற்றைப் பற்றி தாங்கள் கருணையுடன் விஸ்தாரமாக எடுத்துரைக்க வேண்டும்," என்று வேண்டி நின்றான்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனின் வேண்டுகோளுக்கு இணங்கி," பாண்டு நந்தனா! ஒரு சமயம் ப்ருத்வியை (பூமி) ஆண்ட ராஜா மாந்தாதா, ரிஷி லோமசரிடம் இதே கேள்வியை கேட்டான். ராஜனின் கேள்விக்கு லோமச ரிஷி அளி...
Amalaki Ekadasi (Tamil) / ஆமலாகீ ஏகாதசி (நெல்லிக்கனி ஏகாதசி)

Amalaki Ekadasi (Tamil) / ஆமலாகீ ஏகாதசி (நெல்லிக்கனி ஏகாதசி)

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
பால்குண மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஆமலாகீ ஏகாதசியாக கொண்டாடுவர். ஆமலாகீ ஏகாதசிவிரத மகிமையை நாம் காண்போம். 80,000 ,ரிஷி முனிவர்கள் சூத முனிவரின் உபன்யாசத்தைக் கேட்பதற்காக கூடியிருந்த பொழுது சூதர் "முனிவர்களே,முன்பொரு முறை நடந்த சம்பவம் இது. மஹான் ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம் கேட்டார்," பிரம்மரிஷி வசிஷ்டரே, தாங்கள் என்னை ஆசீர்வதிக்க நினைத்தால், மங்களமான நன்மை அளிக்கும் விரதம் ஏதாவது உண்டென்றால், அந்த விரதத்தைப் பற்றிய கதை, அதன் மஹிமை இவற்றைப் பற்றி கூறிஅருளுங்கள்." என்றார். மஹரிஷி வசிஷ்டர்," ராஜன், உத்தமமானதும், மோட்சப்பிராப்தியை அளிக்கக் கூடியதும் ஆன ஆமலாகீ ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களிலும் மேலானது ஆகும்." என்றார்.ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம், "வேதங்களில் பாண்டித்யம் பெற்ற முனி சிரேஷ்டரே, அமலாகீ விரதம் உருவானகதை, விரதம் அனுஷ்டிக்கும் விதிமுறை இவற்றைப் பற்றி கருணையுடன் விஸ்தாரம...
Vijaya Ekadashi (Tamil) / விஜய ஏகாதசி

Vijaya Ekadashi (Tamil) / விஜய ஏகாதசி

ஏகாதசி
மாசிமாதம் - கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை விஜய ஏகாதசியாக ‌கொண்டாடுவர். விஜய ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.ஏகாதசிவிரத மஹாத்மிய கதைகள் அர்ஜூனனின் மனதிற்கு அளவில்லாத ஆனந்தம் அளித்தாலும், திருப்தி அடையாமல், ஜெயா ஏகாதசி விரத மஹிமையை கேட்டு முடித்தவுடன், ஸ்ரீகிருஷ்ணரிடம், " ஹே மதுசூதனா! தாங்கள் கிருபை புரிந்து, பால்குண மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிக்கும் விதி, இவற்றைப்பற்றி விஸ்தாரமாக கூற வேண்டுகிறேன்." என்றான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "ஹே பார்த்தா! மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி, விஜய ஏகாதசி என்னும் பெயரால்அழைக்கப்படுகிறது. இவ் விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் வெற்றி கிட்டுகிறது. மிகவும் மேன்மை வாய்ந்த இவ்விரத மஹாத்மியகதையைக் கேட்பதாலும், படிப்பதாலும் அனைத்து பாபங்களும் அழியப் பெறுகின்றன....
Sat-Tila Ekadashi (Tamil) / சத்தில ஏகாதசி

Sat-Tila Ekadashi (Tamil) / சத்தில ஏகாதசி

ஆன்மீகப் பதிவு, ஏகாதசி
ஒரு முறை நாரத முனி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த சத்தில ஏகாதசியின் மகிமையைப்பற்றி கேட்க, அதற்கு பகவான் கூறினார்.            முன்பு ஒரு காலத்தில் ஒரு பிராமணப் பெண் ஒருத்தி என்னை அன்புடன் பூஜித்து வந்தாள். விரதங்களை (ஏகாதசி, கோகுலாஷ்டமி, இராம நவமி…முதலியன) தவறாமல் அனுசரித்தும், வேண்டியவர்களுக்கு தானங்களை கொடுத்தும், எந்த வித பலனையும் எதிர்பாராமல் என்னையும் பூஜித்தும் வந்தாள். ஆனால், அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. உணவை பிராமணர்களுக்கோ மற்ற தேவர்களுக்கோ அளிக்க மாட்டாள். இதை நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். இவள் தன் கடும் விரதங்களாலும், பூஜைகளாலும் என் உலகை அடையத்தகுந்தவள் என்றாலும் நான் அவளை சோதிக்க எண்ணி, மண்டை ஓடு மாலை அணிந்த சிவணடியார் வேடம் பூண்டு அவளிடம் சென்றேன். அவளிடம் நான் பிச்சை கேட்க, அவள் கோபமுடன் சேற்றை (களிமண்) என் பிச்சை பாத்...
Putrada Ekadashi (Tamil) / புத்ரதா ஏகாதசி

Putrada Ekadashi (Tamil) / புத்ரதா ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
https://youtu.be/ploD_JOK7jg புத்ரதா ஏகாதசி மகிமை - Videoபுத்ரதா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.அர்ஜூனன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதாரவிந்தங்களில் நமஸ்கரித்து, சிரத்தையுடனும் பணிவுடனும் கிருஷ்ணரிடம், " ஹே சச்சிதானந்த பரம் பொருளான ஸ்ரீ கிருஷ்ணா!, இப்பொழுது தை மாதம் சுக்லபட்ச ஏகாதசியைப் பற்றி கூறுங்கள்" என்று வேண்டி நின்றான். இந்த ஏகாதசியின் மகத்துவம், அதன் பெயர், அன்று வழிபட வேண்டிய தெய்வம், விரத வழிமுறைகள், இவற்றைப்பற்றி எல்லாம் விரிவாக உபதேசிக்க வேண்டும்" என்றான்.அர்ஜூனின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர்," ஹே ராஜனே, புஷ்ய (தை) மாதம் சுக்ல பட்ச ஏகாதசி, புத்ரதா ஏகாதசி என்னும் பெயரால் அறியப்படுகிறது. முந்தைய ஏகாதசி மஹாத்மியங்களில் கூறிய பூஜை விதிகளின் படி அன்று பூஜை செய்ய வேண்டும். விரதநாளன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். இவ்வுலகில் புத்ரதா ஏகாதசி விரதத்திற்கு...
Utpanna Ekadasi (Tamil) I உத்பன்ன ஏகாதசி

Utpanna Ekadasi (Tamil) I உத்பன்ன ஏகாதசி

ஏகாதசி
ஏகாதசி தோன்றிய கதை(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)கிருத யுகத்தில் வாழ்ந்து வந்த முராசுரன் என்னும் கொடூர அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி அவர்களை ஸ்வர்கத்திலிருந்து விரட்டினான். இந்திரனின் தலைமையில் எல்லா தேவர்களும் கரம் குவித்து, துதி பாடி, பாற்கடலில் பள்ளி கொண்ட சுதர்சனம் ஏந்திய கருட வாகனர் ஸ்ரீ விஷ்ணுவிடம் தங்களது குறைகளை முறையிட்டனர்.அசுரனின் கொடுமைகளைக் கேட்ட பகவான் விஷ்ணு தேவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்து, முராசுரனுடன் போரிட்டார். தனது அம்புகளாலும் சுதர்சனத்தினாலும் அசுர சேனைகளை விரட்டியடித்தார். நீண்ட காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் நடுவில், பகவான் விஷ்ணு பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஹேமவதி என்ற குகைக்குள் ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். அவரைத் தேடி அங்கு வந்த முராசுரன், (தெய்வீக) உறக்கத்திலிருந்த விஷ்ணுவிடம் போரிட விரும்பியபோது, ஸ்ரீ விஷ்ணுவின்...
Saphala Ekadashi (Tamil) / சபலா ஏகாதசி

Saphala Ekadashi (Tamil) / சபலா ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
சபலா ஏகாதசி, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார். ஓ! கிருஷ்ணா, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் அதனை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை எனக்கு விவரமாகக் கூறுங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். பரத வம்சத்தில் சிறந்தோனே. பாம்புகளின் ஆதிசேஷன் எவ்வாறு சிறந்ததோ, பறவைகளில் கருடன் எவ்வாறு சிறந்ததோ, யாகங்களில் எவ்வாறு அஸ்வமேத யாகம் சிறந்ததோ, நதிகளில் கங்கை எவ்வாறு சிறந்ததோ, அனைத்து தேவர்களிலும் விஷ்ணு எவ்வாறு சிறந்தவரோ, மற்றும் மனிதர்களில் அந்தணர்கள் எவ்வாறு சிறந்தவர்களோ, அவ்வாறே அனைத்து விரதங்களிலும் ஏகாதசி விரதம் மிகச் சிறந்தது. ஓ, மன்னர்களில...
Rama Ekadashi (Tamil) / ரமா (ராம)  ஏகாதசி

Rama Ekadashi (Tamil) / ரமா (ராம) ஏகாதசி

ஏகாதசி
ரமா ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தனா! ஐப்பசி மாத தேய்ப்பிறையில் (அக்டோபர்/ நவம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் எனக்கு விளக்குங்கள்.ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தனா! ஐப்பசி மாத தேய்ப்பிறையில் (அக்டோபர்/ நவம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிங்கம் போன்றவனே! இந்த ஏகாதசியின் பெயர் ரமா ஏகாதசி. இது ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்துவிடும். இந்...
Pashankusha Ekasashi (Tamil) / பாஸங்குசா ஏகாதசி

Pashankusha Ekasashi (Tamil) / பாஸங்குசா ஏகாதசி

ஏகாதசி
ஐப்பசி மாத வளர்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக் கூடிய பாஸங்குசா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! மதுசூதனா, ஐப்பசி மாத வளர்ப்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் தயவு செய்து எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த ஏகாதசியின் பெயர் பாஸங்குசா ஏகாதசி. ஒருவரின் பாவங்களை அழிக்கக் கூடிய இந்த ஏகாதசியின் பெருமைகளைக் கேள். சிலர் இந்த ஏகாதசியை பாயபங்குஸா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசியன்று ஒருவர் விசேஷமாக பத்மநாபரை வணங்க வேண்டும். இந்த ஏகாதசி மேலுலக சுகங்களையும் முக்தியையும் மற்றும் ஒருவர் வேண்டிய பலன்களையும் கொடுக்கிறது. பகவான் விஷ்ணுவின் புனித நாம...
Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

ஏகாதசி
இந்திரா ஏகாதசி பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! கிருஷ்ணா ஓ! மதுசூதனா! ஓ! மது என்ற அரக்கனை கொன்றவரே! புரட்டாசி மாத தேய்பிறையில் (செப்டம்பர்/ அக்டோபர்) தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறைகள் யாவை? இதை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? பகவான் கிருஷ்ணர், பதிலளித்தார். இந்த புனிதமான ஏகாதசியின் பெயர் இந்திரா ஏகாதசி. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் எல்லா பாவ விளைவுகளும் அழிக்கப்படும் மற்றும் இழிவடைந்த தன் முன்னோர்கள் விடுதலை பெறுவர்.ஓ! மன்னா! சத்ய யுகத்தில் இந்திரசேனா என்ற ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் தன் எதிரிகளை வெல்வதில் சாமர்த்தியமானவர். அவர் மாஹிஸ்மதிபுரி என்ற தன் இராஜ்ஜியத்தை செழிப்புடன் ஆண...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question