உத்கோசக தீர்த்தத்தில் கடும் தவமியற்றிய மாமுனிவராவார். அவர் பாண்டவ மன்னர்களின் ராஜ புரோகிதராக நியமிக்கப்பட்டார். பாண்டவர்களின் பல சமயச் சடங்குகளில் (ஸம்ஸ்கார) அவர் புரோகிதராக செயலாற்றினார். மேலும் திரௌபதியின் நிச்சயதார்த்தத்தின்பொழுது ஒவ்வொரு பாண்டவருடனும் அவர் இருந்தார். பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்டபொழுதும் கூட அவர் அங்கிருந்தார். மேலும் பாண்டவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தபோதெல்லாம் அவர்களுக்கு அவர் அறிவுரை கூறுவது வழக்கம். ஓராண்டு காலம் தலைமறைவாக வாழ்வதெப்படி என்று அவர்களுக்கு அவர் உபதேசித்தார்.
மேலும் அச்சமயத்தில் அவரது உபதேசங்களை பாண்டவர்கள் உறுதியாகப் பின்பற்றினர். குருட்சேத்திர யுத்தத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்ட பொதுவான ஈமச்சடங்குகளின் போது அவரது பெயரும் குறிப்பிடப்பட்டது. மகாபாரதத்தின் அனுஷாஸன-பர்வத்தில் (127.15-16), அவர் யுதிஷ்டிர மகாராஜனுக்கு மிகவும் விரிவான சமய உபதேசங்களை அருளினார். அவர் உண்மையில் ஓர் இல்லறவாசிக்கேற்ற சரியான புரோகிதராவார். ஏனெனில், அவரால் பாண்டவர்களுக்கு மதத்திற்குரிய சரியான வழியைக் காட்ட முடிந்தது. இல்லறவாசியை அவருக்குரிய சரியான ஆஷ்ரம தர்மப்படி முன்னேற வழிகாட்டுவது ஒரு புரோகிதரின் கடமையாகும். உண்மையில், குடும்ப புரோகிதருக்கும், ஆன்மீக குருவிற்கும் வேறுபாடில்லை, முனிவர்களும், ஞானிகளும், பிராமணர்களும் அத்தகைய கடமைகளைச் செய்வதற்காகவே முக்கியமாக உள்ளனர்.