Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ரகுநாத தாஸ கோஸ்வாமியும் சந்தித்தல் இந்த அத்தியாயத்தின் சுருக்கம் பக்தி வினோத தாகூரால் தமது அம்ரித-ப்ராவாஹ-பாஷ்ய உரையில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பிரேமையின் தெய்வீக வலிப்பினுள் நுழைந்தபோது , இராமானந்த ராயரும் ஸ்வரூப தாமோதாரும் அவரை கவனித்துக் கொண்டனர் . அவர் விரும்பியபடி திருப்திப்படுத்தினர் . ரகுநாத தாஸ் கோஸ்வாமி நீண்ட காலமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் தமது திருவடிகளை அடைவதற்கு முயன்று கொண்டிருந்தார் . இறுதியாக , அவர் இல்லத்தை விட்டு விலகி மஹாபிரபுவைச் சந்திக்க வந்தார் . ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குப் போகும் வழியில் சாந்திபுரத்திற்குச் சென்றிருந்தபோது , ரகுநாத தாஸ கோஸ்வாமி தமது வாழ்வினை மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளில் அர்ப்பணி...