
ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு
ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு(வழங்கியவர்: ஸ்ரீமதி தேவி தாஸி)அசுரர்களின் எதிரி; பக்தர்களின் பாதுகாவலர்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சர்வதேச தலைமையகம் மேற்கு வங்காளத்திலுள்ள மாயாபூரில் உள்ளது. அங்கு வீற்றிருக்கும் உக்கிர நரசிம்மர் . அங்கு வரும் பக்தர்களைக் கவர்ந்து பற்பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார். அவர் அங்கு தோன்றியதன் அற்புத வரலாற்றினை இங்கு சுருக்கமாக வழங்குகிறோம்.கொள்ளையர்களின் தாக்குதல்1984ம் வருடம், மார்ச் மாதம் 24ம் தேதியன்று மதியம் 12:20 மணியளவில், சுமார் முப்பத்தைந்து குண்டர்கள், ஸ்ரீதாம் மாயாபூரில் உள்ள இஸ்கானின் சந்திரோதய கோயிலை ஆயுதங்களுடனும் குண்டுகளுடனும் தாக்கினர். பக்தர்களை மிகவும் மோசமாக நடத்திய அந்தக் கொள்ளையர்கள், ஸ்ரீல பிரபுபாதரின் மூர்த்தியையும் ஸ்ரீமதி ராதாராணியின் விக்ரஹத்தையும் திருடிச் செல்ல முடிவு செய்தனர். இதனால் ...