பகவத் கீதை – 7.14
தைவீ ஹ்யேஷா குண—மயீமம மாயா துரத்யயாமாம் ஏவ யே ப்ரபத்யந்தேமாயாம் ஏதாம் தரந்தி தேSynonyms:தைவீ — தெய்வீக; ஹி — நிச்சயமாக; ஏஷ — இந்த; குண-மயீ — ஜட இயற்கையின் முக்குணங்களாலான; மம — எனது; மாயா — சக்தி; துரத்யயா — வெல்வது கடினமானது; மாம் — என்னிடம்; ஏவ — நிச்சயமாக; யே — எவர்கள்; ப்ரபத்யந்தே — சரணடைந்தவர்; மாயாம்-ஏதாம் — இந்த மயக்க சக்தி; தரந்தி — வெல்கின்றனர்; தே — அவர்கள்.Translation:ஜட இயற்கையின் முக்குணங்களாலான எனது இந்த தெய்வீக சக்தி வெல்லுவதற்கரியது. ஆனால் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.Purport:புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் எண்ணற்ற சக்திகளை உடையவர்; அவை அனைத்தும் தெய்வீகமானவை. உயிர்வாழிகளும் அத்தகைய சக்திகளில் ஒரு பாகமே என்பதால், அவர்களும் தெய்வீகமானவர்களே; இருப்பினும், ஜட சக்தியுடன் கொண்ட தொடர்பினால் அவர்களின் உண்மையான உயர்சக்தி மறைக்கப்பட்டுள்ளது. ஜட...