பகவத் கீதை – 14.6
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஷகம் அனாமயம்ஸுக-ஸங்கேன பத்னாதிக்ஞான-ஸங்கேன சானகவார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்தத்ர—அவற்றில்; ஸத்தவம்—ஸத்வ குணம்; நிர்மலத்வாத்—ஜடவுலகில் மிகவும் தூய்மையாக இருப்பதால்; ப்ரகாஷகம்—பிரகாசப்படுத்துகின்ற; அனாமயம்—பாவ விளைவுகள் ஏதுமில்லாத; ஸுக—இன்பத்தின்; ஸங்கேன—தொடர்பினால்; பத்னாதி—பந்தப்படுத்துகின்றது; க்ஞான—ஞானத்தின்; ஸங்கேன—தொடர்பினால்; ச—மேலும்; அனக—பாவமற்றவனே.மொழிபெயர்ப்புபாவமற்றவனே, மற்றவற்றைவிட தூய்மையானதான ஸத்வ குணம், பிரகாசப்படுத்துவதாகவும் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிப்பதாகவும் அமைகின்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் இன்பத்தின் தொடர்பினாலும் ஞானத்தின் தொடர்பினாலும் பந்தப்பட்டுள்ளனர்.பொருளுரைஜட இயற்கையினால் கட்டுப்படுத்தப்படும் உயிர்வாழிகளில் பல்வேறு வகையுண்டு. ஒருவன் மகிழ்ச்சியாகவும், அடுத்தவன் மிகவும் சுறுசுறுப்பாகவும், மற்றவன் உ...