Hera Panchami (Tamil) / ஹேரா-பஞ்சமி
"ஜகந்நாதர் கோயிலிலிருந்து குண்டிசாவிற்குச் செல்லும் வீதியை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பல்வேறு லீலைகளை நிகழ்த்தினார். கிருஷ்ணதாஸர் எனும் பிராமணர் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரவிற்கு அபிஷேக நிகழ்ச்சியினை நடத்தினார்.""குண்டிசா கோயிலில் நடனமாடிய பின்னர், மஹாபிரபு தமது பக்தர்களுடன் நீரில் விளையாடினார், ஹேரா-பஞ்சமி தினத்தன்று அவர்கள் அனைவரும் செல்வத் திருமகளான லக்ஷ்மி தேவியின் செயல்களைக் கண்டனர்."- ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் 1.144-145ஹேரா - பஞ்சமி உற்சவம் என்பது ரத யாத்திரைக்கு ஐந்து நாள்களுக்குப் பின்னர் வருகிறது. பகவான் ஜகந்நாதர் தமது மனைவி லக்ஷ்மியினைக் கைவிட்டு குண்டிசா கோயிலான விருந்தாவனத்திற்குச் சென்று விட்டார். பகவானின் பிரிவினால், லக்ஷ்மி தேவி அவரைக் காண்பதற்காக குண்டிசாவிற்கு வர முடிவு செய்கிறாள். லக்ஷ்மி தேவி குண்டிசாவிற்கு வருவது ஹேரா - பஞ்சமி என்ற...