
நவ நரஸிம்ம திருக்கோவில், அஹோபிலம், ஆந்திரா
பகவான் நாராயணரின் மற்ற அவதாரங்களிலிருந்து வேறுபட்ட அவதாரம் நரஸிம்ம அவதாரம். உலக மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவும், ஒரு தனி நபருக்காக, உண்மையான பக்திக்குப் பரிசாக எடுக்கப்பட்ட அவதாரம்."அஹோபிலம்" என்ற பெயர் எப்படி வந்தது ? நாராயணரை நரஸிம்மராகத் தரிசிக்கும் ஆர்வத்துடன் கருட பகவான் இத்தலத்தில் அமர்ந்து கடும்தவம் செய்தார். கருடனின் தவத்தை மெச்சி அவருக்கு நரஸிம்மராகக் காட்சியளிக்க திருவுளம் கொண்டார் பரந்தாமன்.
சத்திய சொரூபமாக, மகாபுருஷராக, நெருப்பின் உக்கிரத்தோடு நரஸிம்மர் அம்மலைத் தொடரில் ஓர் உயரமான குகையில் அவருக்குக் காட்சியளித்தார்.
நவ நரஸிம்ம ஆலயம் இந்தியாவில், ஆந்திராவின் "நந்தியால்" என்ற இடத்திற்கு அருகில் அஹோபிலத்தில் அமைந்துள்ளது. நரஸிம்மரைக் குறிக்கும், வணங்கப்பட்ட வைணவ ஆல...