புருஷோத்தம மாதத்தின் மஹிமைகள்
பல வருடங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான முனிவர்கள் யாகங்கள் செய்வதற்காக நைமிசாரண்யத்தில் ஒன்று கூடினர்.; மாபெரும் முனிவர் சூத கோஸ்வாமியும் அங்கு வந்து சேர்ந்ததை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். எல்லோரும் அவரை மிக அழகிய வியாஸ ஆசனத்தில் அமரச் செய்தனர்.முனிவர்கள் சூத கோஸ்வாமியிடம் இருகரம் கூப்பி கேட்டு கொண்டனர். “சூத கோஸ்வாமியே பகவான் கிருஷ்ணரின் அற்புதமான லீலைகள் பலவற்றில் மிகச்சிறந்த ஓன்றை நாங்கள் இந்த பௌதிக கடலில் இருந்து மீண்டு ஆன்மீக உலகம் திரும்புச்செல்லும் விதமாக தயவு செய்து எடுத்துரையுங்கள்.”சூத கோஸ்வாமி கூறினார். “முனிவர்களே நான் இப்போது ஹஸ்தினாபுரத்தில் சுகதேவ கோஸ்வாமியின் தாமரை திருவாயிலிருந்து ஸ்ரீ மத் பாகவதம் முழுவதையும் பகவானின் எண்ணற்ற லீலைகளையும் கேட்டு வந்துள்ளேன். அதில் முக்கியமான ஒன்றை கூறுகிறேன்.”முன்னொரு நாள் நாரத முனிவர் பத்ரிகாஸ்ரமத்தில் நர நாராயண ...