கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 9 I Gita mahatmiya Chapter-9
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தின் மஹிமைசிவபெருமான் கூறினார், எனதன்பு பார்வதியே, "ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தின் மகிமைகளை நான் இப்போது கூறுகிறேன்". நர்மதா நதிக்கரையில் மஹிஷ்மதி என்ற ஊரில், மாதவா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வேத சாஸ்திரங்களின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, உயர்தர பிராமணராக விளங்கினார். கற்றறிந்த பிராமணர் என்ற காரணத்தினால், அவருக்கு நிறைய தானம் கிடைக்கும். தானத்தின் மூலம் கிடைத்த பொருட்களை வைத்து ஒரு பெரிய யாகம் செய்ய திட்டமிட்டார். யாகத்தின் ஆகூதிக்காக ஒரு ஆட்டை கொண்டு வந்தார் அவர். யாகத்திற்கு பலர் வந்திருந்தனர். யாகத்தின் போது அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக, ஆடு மிகவும் சப்தமாக சிறித்து விட்டு பேச துவங்கியது. அது, "ஓ பிராமணரே, நம் அனைவரையும் மீண்டும் மீண்டும் பிறப்பு ...