Sunday, December 22

Bhishma Panchaka (Tamil) / பீஷ்ம பஞ்சங்கம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தாமோதர மாதத்தின் கடைசி ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சங்கம் அல்லது விஷ்ணு பஞ்சங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிதாமஹர் பீஷ்மர் கார்த்திகை மாதத்தில் கடைசி ஐந்து நாட்கள் தூய கிருஷ்ண உணர்வில் மிகவும் கடுமையான இந்த விரதத்தை மேற்கொண்டு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தி தொண்டில் ஈடுபட , தனது முழு கவனத்தையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரில் மூழ்கச் செய்தார்.

பீஷ்ம பஞ்சங்கம், சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள்  அதாவது உத்தான ஏகாதசி முதல் பௌர்ணமி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாட்களில் விரதம்  இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில்  ஆன்மிக பலன்களை அடைவார்கள். அதுமட்டுமின்றி ஆன்மிக சேவைகளில் வரும் தடைகள் நீங்கி விரைவில் முன்னேற இந்த விரதம் உதவும்.

விரத முறைகள்

ஒரு பக்தருக்கு ஆன்மீகத்தில் முன்னேற, பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்திபடுத்த சிலபதார்த்தங்களை தவிர்த்து உபவாசம் அனுஷ்டிக்க முடியும் என்று ஹரி பக்தி விலாசம் எனும் கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது. (இருந்தாலும் இது  நிர்ப்பந்தம் அல்ல அவரவர் சௌகரியத்தை பொருத்தது.)

முதல் நிலை

பீஷ்ம பஞ்சங்க நாட்களில் பல பக்தர்கள் முழுமையான விரதம் இருப்பார்கள் அதாவது  “நிர்ஜலம்” -நீர் கூட  அருந்தாமல் விரதம் இருப்பார்கள். (இது ஒருவருடைய உடல் நிலை பொருத்து கடைபிடிக்க வேண்டும்) அல்லது , இந்த  ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாள் ஒரு முறை ஒரு சிறிய  தேக்கரண்டி( ஸ்பூன்) அளவிற்கு பஞ்ச காவ்யத்தில் ஏதாவது ஒன்றை குடிக்கலாம் வேறு எதையும்  உண்ணக்கூடாது. 

முதல் நாள் : பசும் சாணம் உண்ணலாம் 

இரண்டாவது நாள் : பசும் கோமியம் அருந்தலாம்

மூன்றாவது நாள் : பசும் பால் அருந்தலாம்

நான்காவது நாள் : பசும் தயிர் உண்ணலாம் 

ஐந்தாவது நாள் : பஞ்ச காவ்யம் (சாணம், பால், கோமியம், தயிருடன் நெய்யும் சேர்த்து உண்ணலாம் )

இரண்டாவது நிலை

முதல் நிலை விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் .இந்த ஐந்து நாட்களில் பழங்களும்( கொய்யா பழம், மாதுளம் பழம் போன்ற நிறைய விதை உள்ள பழங்களை தவிர்த்தல் நல்லது) பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை போன்றவை  எடுத்துக் கொள்ளலாம். வாழைக்காய் , கிழங்கு வகைகளும் வேகவைத்து  பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து பின் அந்த மகாபிரசாதத்தை உண்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.


பீஷ்ம பஞ்சங்க & உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசி. தினமும் கீழ்க்கண்ட மலர்கள் மற்றும் வாசனை திரவியம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு (தாமோதரருக்கு) அர்பணிப்பது மிகுந்த நன்மைபயக்கும்.

முதல் நாள் : தாமரைப் பூ
(பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடியில் தாமரை பூவை சமர்ப்பிக்க வேண்டும் )

இரண்டாம் நாள்  : வில்வ இலை
(பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திரு-தொடையில் வில்வ இலை சமர்ப்பிக்க வேண்டும்)

மூன்றாம் நாள்:   வாசனை திரவியம்
(பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாபிகமலத்தில் வாசனை திரவியதை அர்ப்பணிக்க வேண்டும்

நான்காம் நாள் :  செம்பருத்தி பூ
(பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருத் தோளில் செம்பருத்திபூவை சமர்ப்பிக்க வேண்டும் )

ஐந்தாம் நாள் :  மாலதி மலர் 
(பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிரசில் கொடிமல்லிகை அல்லது பிச்சிப்பூவை சமர்ப்பிக்க வேண்டும்.)

தினமும் ஒருவர் கங்கையிலோ அல்லது மற்ற புனித நதிகளிலோ நீராடுவது மிகச்சிறந்தது.  மேலும் பின்வரும் மந்திரத்தைக் கூறி பீஷ்மருக்கு மூன்று முறை தர்பணம் வழங்க வேண்டும்

தர்ப்பணம்

ஓம் வையாஹ்ர பத்ய கோத்ராய
ஸம்க்ரருதி ப்ரவராய ச
அபுத்ராய ததாம்யேதத்
ஸலீலம் பீஷ்மவர்மணே

அரஹ்க்ய

வாஸுநாமாவதாராய
ஸாந்தநோரத்மஜாய  ச
அர்ஹ்க்யம் ததாமி பீஷ்மாய
அஜன்ம ப்ரஹ்மசாரிணே

ப்ரணாமம்

ஓம் பீஷ்ம: ஸந்தானவோ பீர:
ஸத்யவதி ஜிதேந்த்ரிய:
அபிரத்பிரவப்னாது
புத்ரபௌத்ரோசிதம் க்ரியம்


பீஷ்ம பஞ்சக விரதம் சங்கல்பம்
கரத்தினால் சிறிது நீரை எடுத்து தலையின் மீது தெளித்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்:

ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ‘பி வா
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யாந்தர: சுசி:

ஸ்ரீ-விஷ்ணு
ஸ்ரீ-விஷ்ணு
ஸ்ரீ-விஷ்ணு

ஸ்ரீ குரு ப்ராணாம்
நமா ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரெஸ்தாய புதலே
ஸ்ரீமதே (உங்களுடைய ஆன்மீக குருவின் பெயர்) இதி நாமினே


ஸ்ரீ கிருஷ்ண பிரணாம மந்திரம்,
ஹே க்ருஷ்ண கருணா–ஸிந்தோ தீன–பந்தோ ஜகத் பதே
கோபேஷ கோபிகா–காந்த ராதா–காந்த நமோ ’ஸ்து தே

ஸ்ரீ ராதா பிரணாம மந்திரம்,
தப்த–காஞ்சன–கௌராங்கி ராதே வ்ருந்தாவனேஷ்வரி
வ்ருஷபானு–ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி–ப்ரியே

ஸ்ரீ பஞ்ச தத்வா மந்திரம்
பஞ்ச தத்வாத் மகம் க்ருஷ்ணம் பக்தரூப ஸ்வரூபகம்
பக்தாவதாரம் பக்தாக்யம் நமாமி பக்த ஷக்திகம்

ஸ்ரீ நரசிம்மதேவரின் ப்ரணாம்
நமஸ்தே நரசிம்மாயா
ப்ரஹ்லாதாலாத-தாயினே
ஹிரண்யகசிபூர் வக்ஷ:
சிலா-டங்கான காலாயே

இதோ நரசிம்மா பரதோ நரசிம்மோ
யதோ யதோ யாமித தோ நரசிம்ம
பஹிர் நரசிம்மோ ஹ்ருதயே நரசிம்மோ
நரசிம்ஹம் ஆதிம் சரணம் ப்ரபத்யே

சங்கல்பம் செய்யும் முறை

(சிறிது நீரை கரத்தில் வைத்துக்கொண்டு பின்வருமாறு கூற வேண்டும்)

ஹரி ஓம் தத் சத்

ஓம் கோவிந்தா !
ஓம் கோவிந்தா !
ஓம் கோவிந்தா !

அத்யா பிராமனோ ஆஹ்னி த்விதீய பரார்தே ஸ்ரீ ஸ்வேதவராஹகல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஸ்தாவிம்சதித்தமே கலி யுகே, கலி பிரதம பாதே ஜம்பூத்வீபே பரதக்கண்டே , பாரதவர்ஷே , ( உங்கள் ஊர் பெயர்) தக்ஷிணாயனே கார்த்திகா மாஸே சுக்ல பக்ஷே ஏகாதசி – துவாதசி – திரயோதசி – சதுர்தசி – பூர்ணிமா திதௌ அச்யுத கோத்ரஸ்ய (உங்கள் பெயர்) ஸ்ரீ கிருஷ்ணா ப்ரீத்தி காம பஞ்சடிநாத்மக பீஷ்மபஞ்சகா விரதம் அஹம் கரிஷ்யே .

ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய !
திவீவ சக்ஷூராததம்! தத் விப்ராஸோ விபந்யவோ!!
ஜாக் ருவாம்ஸஸ் ஸமிந்ததே! விஷ்ணோயார்த் பரமம் பதம்!!

ஜெய ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்தா
ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாசாதி கௌர பக்த வ்ரிந்தா.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

4 Comments

  • Sethu

    ஹரே கிருஷ்ண!!!!!!
    பீஷ்ம பஞ்சக்!!
    சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள்
    உத்தன ஏகாதசி முதல் பௌர்ணமி வரை இந்த
    வருடாவருடம்.

    இந்த வருடம் 15.11.2021 முதல் 19.11.2021 வரை உள்ள நாட்கள் இந்த நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில் ஆன்மிக பலன்கள் கிடைக்கும் ஆன்மிகத்தில் விரைவில் முன்னேற முடியும்.

    இந்த பீஷ்ம பஞ்சக் என்ற நாட்களில் பல பக்தர்கள் முழுமையான (நிர்ஜல் -நீர் கூட அருந்தாமல்) விரதம் இருப்பார்கள்.

    அல்லது , இந்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாள் ஒரு முறை ஒரு சிறிய ஸ்பூன் அளவிற்கு பஞ்ச கவ்யத்தில் ஏதாவது ஒன்றை குடிக்கலாம் வேறு எதையும் உண்ணக்கூடாது
    முதல் நாள் : பசும் சாணம் உண்ணலாம்
    இரண்டாவது நாள் : பசும் கோமியம் உண்ணலாம்
    மூன்றாவது நாள் : பசும் பால் உண்ணலாம்
    நான்காவது நாள் : பசும் தயிர் உண்ணலாம்
    ஐந்தாவது நாள் : பஞ்ச கவ்யம் உண்ணலாம்
    இது செய்யும் போது உங்களுடைய சாதானாஸ் சரியாக செய்ய வேண்டும்

    அல்லது இந்த ஐந்து நாட்களில் முதல் நாள் மட்டும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இன்று தானியங்கள் பருப்பு வகைகள் நல்லெண்ணெய் உண்ணக்கூடாது.
    (ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் என கீழே தகவல்கள் உள்ளது )
    துவாதசி அன்று ஒரேயொரு பருக்கை ஜகந்நாத பிரசாதம் ஏற்றுக் கொண்டு பிறகு பீஷ்ம பஞ்சகா விரதத்தை மேற்கொள்ளலாம் ( உணவை உண்ணக்கூடாது)
    முதல் நாள் மட்டும் ஏகாதசி விரதம் இருந்துவிட்டு அடுத்த நான்கு நாட்கள் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் உணவை உண்ணலாம் (அது மதியமோ அல்லது மாலையோ உண்ணலாம் )
    இதில் காலை முழு வரதமும்
    இரவு பழங்களை உண்ணலாம்.

    மற்றும்
    நமது சதானாவை அதிகமாக செய்யலாம்
    * சூரிய உதயத்திற்கு முன் 3.30 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு மங்கள ஆரத்தி முடித்துவிடுங்கள்
    * 18/ 25 /32 /48 /64 சுற்றை ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபம் செய்யலாம்.
    * குறைந்த பட்சம் காலை 7. மணிக்குள் ஜபத்தை முடிக்கவும்.
    * தரையில் பாய் போட்டுப்படுக்கவும்
    * இந்த நாட்களில் பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்கவும்
    * நெய் விளக்கு ஆர்த்தியை பகவான் தாமோதருக்கு தினமும் 2 அல்லது 3 முறை காட்டவும்
    * தாமோதர அஷ்டகம் மற்றும் ஸ்ரீபிரம்ம சம்ஹிதையை பாடவும்
    * பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம், புருஷோத்தமரான பகவான் கிருஷ்ண புத்தகத்தை படிக்கவும்.
    இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால-கோபால ரூபம் சம்பந்தமான லீலையை படிக்கவும்
    * கோயிலை தினமும் 1/ 3 முறை பரிக்கிரமா (சுற்றிவரவும்)செய்யவும்
    * விரஜ தாமத்தை 1/ 3 முறை பரிக்கிரமா செய்யவும்
    * புனிதமான குண்டங்களிலோ கங்கை யமுனா போன்ற புனித நதிகளிலோ குளிக்கவும்
    * எண்ணெய் உபயோகிப்பதை விட்டுவிட்டு தூய பசு நெய்யையே பயன்படுத்தவும் (எண்ணெய் பலகாரங்களும் வேண்டாம் )
    * பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கோயிலுக்கு நன்கொடை வழங்கவும்
    * பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நெய்வேத்தியம் செய்யாத (பிரசாதம் ஆகாத ) உணவு உண்ண வேண்டாம்
    இதனால் சதுர்மாஸத்தில் இந்த ஐந்து நாட்கள் நீங்கள் செய்யும் மேற்சொன்ன செயல்கள்
    உங்களின் ஆன்மிக பயிற்சியில் மிகவும் அதிகமாக முன்னேற்றமடைலாம்.
    பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கருணையை முழுமையாக பெறலாம்

    *பகவான் ஸ்ரீகிருஷ்ணரில் உடலில் ஒவ்வொரு நாளும் வேறுவேறுவிதமானதை அர்பணிக்க வேண்டும்

    முதல் நாள் : தாமரைப் பூவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவடியில் படும்படி அர்ப்பணிக்க வேண்டும்
     
    இரண்டு நாள் : வில்வ இலையை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திரு-தொடையில் படும்படி அர்ப்பணிக்க வேண்டும்

    மூன்றாம் நாள்: வாசனை திரவியத்தை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாபிகமலத்தில் அர்ப்பணிக்க வேண்டும்

    நான்காம் நாள் : செம்பருத்தி பூவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திரு-தோளில் படும்படி அர்ப்பணிக்க வேண்டும்

    ஐந்தாம் நாள் : (மாலதி மலர் – கொடிமல்லிகை அல்லது பிச்சிப்பூவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சிரசில் படும்படி அர்ப்பணிக்க வேண்டும்

    ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் விதம் :—–
    விரதங்களில் தலையாயது ஏகாதசி விரதம்
    சமஸ்கிருத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள்படும். இங்கு அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொன்றாவது நாளாகும். இந்நாளில் விரதம் இருப்பதை எல்லா சாஸ்த்திரங்களும் வலியுறுத்துகின்றன. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அதிமுக்கியமானதாகும். ஏனெனில் மற்ற விரதங்களை கடைபிடிக்காவிட்டால் பாவங்கள் ஏதும் உண்டாவதில்லை. ஆனால் ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்காவிட்டால் கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும். பிரம்மன் படைத்த உயிர்களில் கொடூரமான பாவங்களையே அங்கங்களாக கொண்ட பாவ புருஷனும் ஒருவன். மக்களைப் பாவச்செயல்களில் செலுத்தி கொடூரமான நரகத்தில் செலுத்துவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வேலை.

    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை எமலோகம் சென்று பார்த்த போது அங்கு உயிர்கள் தங்களுடைய பாவ விளைவுகளினால் கொடூரமான நரகங்களில் துன்புறுவதைக் கண்டார். அவர்களிடம் கருணைகொண்ட பகவான் கிருஷ்ணர் ஏகாதசியின் மகிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க அதை அவர்கள் கடைபிடித்த உடனே பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்க்க லோகங்களை அடைந்தனர். அது முதல் ஏகாதசி மகிமையால் எல்லோரும் புண்ணியபுருஷராக மாற சொர்க்க லோகம் நிரம்பியது. நரகங்கள் வெறிச்சோடி காலியாகவும் ஆயின. பாவப்புருஷனுக்கு துளியும் வேலையில்லாமல் போனது. இதனால் பாவப்புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் முறையிட அதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏகாதசி அன்று தானிய, பருப்பு (அரிசி, நவதானியங்கள், பருப்புவகைகள், பயறுவகைகள், இட்லி,தோசை, சப்பாத்தி, பூரி, உப்புமா, கடுகு, உளுந்து தாளித்தது, காய்கறிகளில் பீன்ஸ், அவரை, மொச்சைவகையறா) இந்த வகை உணவுகளை உண்பவர் உன் வசப்பட்டு கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும் என்று வரமளித்தார்.

    ஆனால் சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, நிலக்கடலை எண்ணெய், காய்கனிகள், பழங்கள், பால்,தயிர் போன்றவற்றை பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.

    ஏகாதசிக்கு முந்திய நாளான தசமி அன்று பகல் மட்டும் உணவு உட்கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாவர்கள் துளசி தீர்த்ததையும், மற்றவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் ஆகும் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலன் கிடைப்பதில்லை.
    ஏகாதசி அன்று செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்
    குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே
    ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    என்ற மந்திரத்தை 108 முறை (ஒரு சுற்று) சொல்ல வேண்டும். இதுபோல குறைந்தபட்சம் 25 சுற்றுகள் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். மற்றும் பகவத்கீதை, ஸ்ரீமத்பாகவதம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். ஏகாதசி அன்று சினிமா பார்ப்பது, பரமபதம் ஆடுவது, வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்யகூடாது.

    நிர்ஜலஏகாதசி (பாண்டவ அல்லது பீம ஏகாதசி ) அன்று முழுவிரதம் இருந்தால் மற்ற 24 ஏகாதசின் பலனையும் அடையலாம்

    வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி ) அன்று முழுவிரதம் இருந்தால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சுலபமாக முக்திப் பாதையைக் காட்டுகிறார்.

    #ஏகாதசிவிரதங்கள்இருப்பது_எவ்வாறு

    நாளை ஏகாதசி

    #உண்ணவேண்டியஉணவுகள்

    நிலக்கடலை, பழங்கள், பால், தயிர், மோர், வெண்ணை, நெய், பன்னீர்

    #காய்கறிகள்

    மரவல்லிகிழங்கு, சர்க்கரைவல்லி கிழங்கு, வெண்பூசணி, சர்க்கரைப்ப்பூசணி, குடைமிளகாய், கேரட், கோஸ், உருளைகிழங்கு வாழைக்காய், உண்ணலாம்…

    Dry Fruits : முந்திரி, பாதாம், பிஸ்தா, அத்திபழம், கிஸ்மிஸ், அக்ரூட் பழம்.

    #எண்ணெய் : பசு நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் சேர்க்கலாம்.

    #இனிப்பு : வெல்லம் கருப்பட்டி நாட்டுச்சக்கரை சேர்க்கலாம்.

    #தவிர்க்கவேண்டியஉணவுகள் :
    #காய்கறிகள் : அவரைகாய், பீன்ஸ், மொச்சை போன்ற பயறு வகைகள்

    கத்திரிக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், சேர்க்கக்கூடாது.

    கடுகு, தானிய வகைகள், சோம்பு, சீனி, பருப்பு வகைகள்,
    அரிசி, கோதுமை மற்றும் சிறுதானிய வகைகள்.
    தாளித்த உணவுகள்

    #எண்ணெய்:: ரீபைண்டு ஆயில், நல்லெண்ணை, கடுகு எண்ணெய், பாமாயில்.

    ஏகாதசி விரதம் அன்று முழு விரதம் இருக்க முடியாதவர்களுக்கு ‌‌நீர் உணவுகளை ஏற்றுக்கொள்ளலாம் உதாரணமாக நீர் பால் தயிர் மோர் இளநீர் போன்றவை உட்கொள்ளலாம்

    அதற்கு மேலும் உணவு வேண்டுமெனில் பழங்களை உண்ணலாம் அனைத்து விதமான பழங்களையும் உண்ணலாம்
    அதற்கும் முடியவில்லை எனில்

    காய்கறிகளை உண்ணலாம் அவரை மொச்சை பீன்ஸ் போன்றவை உண்ணக்கூடாது மேலே சொன்ன உணவுகளை உண்ணலாம்

    பகவான் கிருஷ்ணருக்கு படைத்த பிறகு பிரசாதமாக உண்ண வேண்டும்.

    ஏகாதசி அன்று ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அதிகமாக ஜபம் செய்ய வேண்டும்.

    ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் ஜபம் செய்யும் முறை

    இந்த பஞ்ச தத்துவ மந்திரம் ஒருமுறை ஜபம் செய்ய வேண்டும்

    ஜய ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த ஸ்ரீஅத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி கௌர பக்த வ்ருந்த
    அதன்பின்
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    இந்த மஹா மந்திரம் 108 முறையும் ஜபம் செய்ய வேண்டும்

    எத்தனை 108 முறை
    ஜபம் செய்கிறோமோ அவ்வளவு நல்ல பலன் கிடைக்கும்

    108 என்பது ஒரு சுற்று
    இதுபோல குறைந்த பட்சம் 16 சுற்றுகள் ஜபம் செய்ய வேண்டும்

    ஒரு சுற்று சொல்ல 6 முதல் 8 நிமிடங்கள் ஆகும்

    ஏகாதசி மற்றும் விரத நாட்களில் 25 /32 சுற்றுகள் ஜபம் செய்ய வேண்டும்

  • R. kalavathy

    Hare Krishna, very useful information. Thank you. Observing ekadashi virata. Due to health condition, taking one tme tiffin and night fruits . Doing jepa 16 malas,, Puja and reciting stotra. Requesting the mercy of lord Sri Krishna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question