Sunday, December 22

பகவத் கீதை – 9.34

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

மன்-மனா பவ மத்-பக்தோ
மத்-யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம்
ஆத்மானம் மத்-பராயண:

Synonyms:

மத்-மனா: — எப்பொழுதும் என்னை சிந்தித்துக் கொண்டு; பவ — ஆவாயாக; மத் — எனது; பக்த: — பக்தன்; மத் — என்னை; யாஜீ — வழிபடுபவன்; மாம் — எனக்கு; நமஸ்குரு — வந்தனை செய்; மாம் — என்னிடம்; ஏவ — முழுமையாக; ஏஷ்யஸி — வருவாய்; யுக்தவா — ஆழ்ந்து ஈடுபட்டு; ஏவம் — இவ்வாறாக; ஆத்மானம் — உனது ஆத்மா; மத்-பராயண — எனக்குப் பக்தி செய்து.

Translation:
உனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.

Purport:

களங்கமான இந்த ஜடவுலகின் பந்தத்திலிருந்த விடுபடுவதற்கான ஒரே வழி கிருஷ்ண உணர்வே என்பது இப்பதத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எல்லாவித பக்தித் தொண்டும் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து இங்கே தெளிவாக கூறப்பட்டுள்ள போதிலும், சில சமயங்களில் யோக்கிய மற்ற கருத்துரையாளர்கள் அதனை சிதைத்துவிடுகின்றனர். துருதிர்ஷ்டவசமாக இந்த யோக்கியமற்ற கருத்துரையாளர்கள், படிப்பவர்களின் மனதினை சாத்தியமில்லாத வழிகளுக்குத் திருப்புகின்றனர் கிருஷ்ணருக்கும் அவரது மனதிற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை இத்தகு கருத்துரையாளர்கள் அறிவதில்லை கிருஷ்ணர் சாதாரண நபரல்ல; அவரே பூரண உண்மை. அவர், .அவரது உடல், அவரது மனம் அனைத்தும் ஒன்றே, அனைத்தும் பூரணமானதே. தேஹ-தேஹி-விபேதோ (அ)யம் நேஷ்வரே வித்யதே க்வசித் என்று கூர்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளதை, சைதன்ய சரிதாம்ருதத்திற்கான (ஆதி லீலை, ஐந்தாம் அத்தியாயம், பதம் 41-48) தனது அனுபாஷ்ய உரையில் பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி மேற்கோள் காட்டியுள்ளார். இதன் பொருள் பரம புருஷரான கிருஷ்ணருக்கும் அவரது உடலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதாகும். ஆனால், கிருஷ்ணரைப் பற்றிய இந்த விஞ்ஞானத்தை அறியாத கருத்துரையாளர்கள், கிருஷ்ணரை மறைத்து, அவரது வியகதித்துவத்தை அவரது மனம் அல்லது உடலிலிருந்து பிரிக்கின்றனர். இது கிருஷ்ண விஞ்ஞானத்தைப் பற்றிய முழு அறியாமை என்றபோதிலும், மக்களை இவ்வாறு திசைத் திருப்புவதில் சிலர் இலாபம் பெறுகின்றனர்.

அசுர இயல்பு கொண்ட சிலரும் கிருஷ்ணரைப் பற்றி எண்ணுகின்றனர். ஆனால் கிருஷ்ணரின் மாமனான கம்சனைப் போல் பொறாமையுடன் நினைக்கின்றனர். கம்சனும் கிருஷ்ணரை எப்போதும் எண்ணிக் கொண்டிருந்தான், ஆனால் அவன் கிருஷ்ணரை தனது எதிரியாக எண்ணினான். கிருஷ்ணர் எப்போது தன்னைக் கொல்ல வருவார் என்று திகைத்தபடி அவன் எப்போதும் பயத்துடன் இருந்தான். அத்தகுச் சிந்தனை நமக்கு உதவாது. கிருஷ்ணரை அன்புடன் நினைக்க வேண்டும். அதுவே பக்தி. கிருஷ்ணரைப் பற்றிய ஞானத்தை தொடர்ந்து விருத்தி செய்ய வேண்டும். அவ்வாறு சாதகமாக விருத்தி செய்வது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியரிடமிருந்து கற்க வேண்டும். கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்; மேலும், அவரது உடல் ஜடமல்ல, நித்தியமும் அறிவும் நிறைந்த ஆனந்தமயமானது என்பதை நாம் பலமுறை விளக்கியுள்ளோம். கிருஷ்ணரை பற்றிய இத்தகு விளக்கம், ஒருவன் பக்தனாகுவதற்கு உதவும். . மாறாக, தவறான மூலத்திலிருந்து கிருஷ்ணரை அறிய முயல்வது பயனற்றதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question