யதோ யதோ நிஷ்சலதி
மனஷ் சஞ்சலம் அஸ்திரம்
ததஸ் ததோ நியம்யைதத்
ஆத்மன்-யேவ வஷம் நயேத்
Synonyms:
யத: யத: — எங்கெல்லாம்; நிஷ்சலதி — மிகவும் கிளர்ச்சியடைகின்றதோ; மன: — மனம்; சஞ்சலம் — சஞ்சலம்; அஸ்திரம் — ஸ்திரமின்றி; தத: தத: — அங்கிருந்து; நியம்ய — ஒழுங்குப்படுத்தி; ஏதத் — இந்த; ஆத்மனி — ஆத்மாவில்; ஏவ — நிச்சயமாக; வஷம் — கட்டுப்பாட்டில்; நயேத் — கொண்டு வர வேண்டும்.
Translation:
மனம் தனது சஞ்சலமான நிலையற்ற தன்மையால் எங்கெல்லாம் சஞ்சரிக்கின்றதோ, அங்கிருந்தெல்லாம் மனதை இழுத்து மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
Purport:
மனதின் இயற்கை சஞ்சலமானதும் நிலையற்றதுமாகும். ஆனால் தன்னுணர்வு அடைந்த யோகி மனதைக் கட்டுப்படுத்த வேண்டும், மனதினால் கட்டப்படுத்தப்படக் கூடாது. மனதை (அதன்மூலம் புலன்களையும்) கட்டுப்படுத்துபவன், கோஸ்வாமி அல்லது ஸ்வாமி என்று அழைக்கப்படுகின்றான், மனதால் கட்டப்படுத்தப்படுபவன் கோ-தாஸ (புலன்களின் தாஸன்) என்று அழைக்கப்படுகிறான். புலனின்பத்தின் தரம் கோஸ்வாமிக்குத் தெரியும். திவ்யமான புலனின்பத்தில், புலன்கள் ரிஷிகேசரின் (புலன்களின் உன்னத உரிமையாளரான கிருஷ்ணரின்) சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. தூய்மையாக்கப்பட்ட புலன்களின் மூலம் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதே கிருஷ்ண உணர்வாகும். இதுவே புலன்களை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வழியாகும். யோகப் பயிற்சியின் உன்னத பக்குவநிலை இதுவே, இதை விட உயர்ந்தது வேறேதும் உண்டோ?